ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா தாக்குதல்: பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது நடத்திய வான்வெளித் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அவசர கூட்டம் ஒன்றிற்குத் தலைமையேற்று நடத்திவருகிறார்.
Cobra meeting
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றமான சூழலைத் தொடர்ந்து, லண்டனில், Cobra meeting என அழைக்கப்படும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெருக்கடி நேரங்களில், பிரித்தானிய அமைச்சர்களும் அதிகாரிகளும் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து லண்டனிலுள்ள கேபினட் அலுவலகத்திலுள்ள அறைகளில் (Cabinet Office Briefing Rooms - COBR) சந்தித்து விவாதிக்கும் கூட்டமே Cobra கூட்டம் என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்க ஒருபோதும் அனுமதிக்கப்படக்கூடாது, ஆகவேதான் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வைக் காணும் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்துவருகிறோம் என்று கூறியுள்ளார் அரசின் செய்தித்தொடர்பாளர் ஒருவர்.
மேலும், இப்போதைக்கு நமது உடனடி முன்னுரிமை பிரச்சினைக்குரிய இடத்திலிருக்கும் பிரித்தானிய குடிமக்களின் பாதுகாப்புதான் என்றும், அவர்களுக்கு தூதரக வாயிலாக உதவி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, பஹ்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஜோர்டன், சிரியா, லெபனான், ஈராக், ஏமன், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் ஓமானிலிருக்கும் பிரித்தானியர்களும் எச்சரிக்கையுடன் இருக்கவும், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு அறிவுறுத்தப்பட்டால் அதற்கிணங்க நடந்துகொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |