சில மாதங்களுக்குள் பிரதமர் தனது பதவியை இழக்க நேரிடலாம்: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இன்னும் சில மாதங்களுக்குள் பிரதமர் பதவியை இழக்க நேரிடலாம் என அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தெரிவித்துள்ளார்கள்.
பிரதமர் பதவியிழக்க நேரிடலாம்
ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்று ஒரு ஆண்டுதான் ஆகிறது. அதற்குள் அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே அவர் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.
இந்நிலையில், அடுத்த மே மாதத்தில், வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் லண்டனில் தேர்தல் நடைபெற உள்ளது.
ஏற்கனவே வேல்ஸ் நாட்டில் Reform UK கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், லண்டனில் கிரீன்ஸ் கட்சி போன்ற கட்சிகளால் லேபர் கட்சியின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆக, வரும் தேர்தல் முடிவுகள் லேபர் கட்சிக்கு பாதகமாக முடியுமானால், ஸ்டார்மர் பிரதமர் பதவியை இழக்க நேரிடும் என அவரது கட்சியைச் சேர்ந்த இரண்டு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |