பதவி விலகுகிறாரா பிரித்தானிய பிரதமர்? அவரே கூறிய பதில்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு பொதுமக்களிடையேயும் கட்சிக்குள்ளும் ஆதரவு குறைந்துவருகிறது.
இந்நிலையில், லேபர் கட்சித் தலைமை வேறொருவருக்கு வழங்கப்பட இருப்பதாக வெளியாகியுள்ள தகவலை நிராகரித்துள்ளார் அவர்.
பதவி விலகுகிறாரா பிரித்தானிய பிரதமர்?
லேபர் கட்சித் தலைமை வேறொருவருக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஆனால், அதை நிராகரித்துள்ள ஸ்டார்மர், தான் தனது பதவிக்காலம் முடியும் வரை தலைமைப் பதவியில் நீடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சொல்லப்போனால், 10 ஆண்டுகளுக்கு தான் பிரதமர் பதவியில் நீடிக்கப்போவதாகவும் கூறியுள்ளார் அவர்.
ஆனால், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த லேபர் கட்சியின் முன்னாள் செய்தித்தொடர்பாளரான ஜேம்ஸ் (James Matthewson) என்பவர், நாளை பிரித்தானியாவில் தேர்தல் நடைபெறுமானால், தான் ஸ்டார்மருக்கு வாக்களிக்கமாட்டேன் என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
ஆக, ஸ்டார்மரின் 10 ஆண்டு பிரதமர் ஆசை நிறைவேறுமா என்பது தெரியவில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |