உக்ரைனுக்கான இராணுவத் திட்டங்களை வெளிப்படுத்திய கெய்ர் ஸ்டார்மர்: தயார் நிலையில் நேச நாடுகள்
உக்ரைனில் அமைதி காக்கும் படைக்கான திட்டங்கள் செயல்பாட்டு கட்டத்திற்கு நகரும் நிலையில், இராணுவத் தலைவர்கள் வியாழக்கிழமை லண்டனில் சந்திக்க இருப்பதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பை உறுதி செய்வதற்கு
பிரதமர் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இதை தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில் ஏற்படவிருக்கும் ஒரு சாத்தியமான ஒப்பந்தத்தை ஆதரிப்பதற்காக எங்கள் நடைமுறைப் பணிகளை விரைவுபடுத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம் என ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நமது இராணுவத்தினர் இந்த வாரம் வியாழக்கிழமை லண்டனில் கூடி விவாதிப்பார்கள் என்றும் உக்ரைனின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வலுவான திட்டங்கள் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேட்டோ தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இந்த விவகாரம் தொடர்பில் விவாதித்துள்ளதாகவும் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு 500 பில்லியன் டொலர் இழப்பீடு... புடின் தொடர்பில் எச்சரிக்கும் பிரித்தானிய முன்னாள் பிரதமர்
மட்டுமின்றி, சவுதி அரேபியாவில் அமைதி உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுத்ததற்காக ஜனாதிபதி ட்ரம்பை பிரதமர் ஸ்டார்மர் பாராட்டியுள்ளார். மேலும், உக்ரைனின் நீண்டகால பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம்.
25 உலகத் தலைவர்கள்
இதனால் உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், எதிர்கால ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் முடியும் என நம்புவதாக ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனின் எதிர்கால பாதுகாப்பிற்கு நமது இராணுவங்கள் எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பதை இந்த வாரம் திட்டமிடப்படும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
ஸ்டார்மர் முன்னெடுத்த கூட்டத்தில் 25 உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதி உடன்படிக்கையை ஏற்பதாக மீண்டும் உறுதி செய்துள்ளார்.
ஆனால் ரஷ்ய தரப்பில் இருந்து இதுவரை முடிவேதும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |