சர்ச்சைக்குரிய நபருடன் தொடர்பு: பிரித்தானிய பிரதமர் பதவிக்கு ஆபத்தை உருவாக்கியுள்ள அரசியல்வாதி

United Kingdom Keir Starmer
By Balamanuvelan Feb 05, 2026 05:22 AM GMT
Report

வேலை தருவதாக வாக்களித்து, பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்து, அந்தப் பெண்களை அரசியல் பிரபலங்கள் உட்பட தனது நண்பர்கள் பலருக்கும் விருந்தாக்கியவர் அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன்.

இந்நிலையில், பிரித்தானிய பிரதமரின் லேபர் கட்சி அரசியல்வாதி ஒருவருக்கு எப்ஸ்டீனுடன் தொடர்பு இருந்த விடயம் உறுதியாகியுள்ளதால், பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பதவிக்கு ஆபத்து உருவாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய நபருடன் தொடர்பு

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் லேபர் கட்சியைச் சேர்ந்தவர் பீற்றர் மாண்டல்சன். நாடாளுமன்ற உறுப்பினரான இருந்து, பல்வேறு பதவிகளை வகித்த பீற்றரை அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதராக நியமித்தார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர். 

சர்ச்சைக்குரிய நபருடன் தொடர்பு: பிரித்தானிய பிரதமர் பதவிக்கு ஆபத்தை உருவாக்கியுள்ள அரசியல்வாதி | Starmer Slams For Mandelson Name In Epstein File

இதற்கிடையில், அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்கள், பல்வேறு நாடுகளின் அரசியலிலும் புயலைக் கிளப்பிவருகின்றன.

அந்த ஆவணங்களில் யாரெல்லாம் எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தார்கள் என்பது குறித்த விவரங்களும், அதற்கு ஆதாரமான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. 

சர்ச்சைக்குரிய நபருடன் தொடர்பு: பிரித்தானிய பிரதமர் பதவிக்கு ஆபத்தை உருவாக்கியுள்ள அரசியல்வாதி | Starmer Slams For Mandelson Name In Epstein File

அவ்வகையில், அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதரான பீற்றர், ஒரு இளம்பெண்ணின் அருகே உள்ளாடையுடன் நிற்கும் ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சை தொடர்பில் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ள சகோதரர்

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சை தொடர்பில் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ள சகோதரர்

அதைத் தொடர்ந்து, பீற்றர், பிரித்தானிய அரசின் முக்கியமான பல ஆவணங்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்துகொண்டதற்கு ஆதாரமான சில மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளதால், பிரித்தானிய அரசிலும் அரசியலிலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

பிரதமர் பதவிக்கு ஆபத்து

அதைத்தொடர்ந்து பீற்றர் பணிநீக்கம் செய்யப்பட்டார். பீற்றருக்கு எப்ஸ்டீனுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததும், தான் அவரை பணிநீக்கம் செய்ததாக ஸ்டார்மர் தெரிவித்திருந்தார்.

ஆனால், பீற்றருக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பது குறித்து ஏற்கனவே ஸ்டார்மருக்குத் தெரியும் என்றும், அது தெரிந்திருந்தும் அவர் பீற்றரை அமெரிக்காவுக்கான தூதராக நியமித்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதை பிரதமர் இல்லமும் ஒப்புக்கொண்டுள்ளது. 

சர்ச்சைக்குரிய நபருடன் தொடர்பு: பிரித்தானிய பிரதமர் பதவிக்கு ஆபத்தை உருவாக்கியுள்ள அரசியல்வாதி | Starmer Slams For Mandelson Name In Epstein File

ஆனாலும், பீற்றருக்கும் எப்ஸ்டீனுக்குமான உறவு எவ்வளவு ஆழமானது என்பது தனக்குத் தெரியாது என்றும், அவர் பல ஆண்டுகளாகவே பொய்களை சொல்லிவந்துள்ளார் என்றும், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் ஆவணங்களிலிருந்துதான் உண்மை தெரியவந்துள்ளது என்றும் கூறியுள்ளார் ஸ்டார்மர்.

பீற்றரைக் குறித்து இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் எனக்கு அப்போதே தெரிந்திருந்தால், நான் அவரை அரசின் கிட்டேயே வர அனுமதித்திருக்கமாட்டேன் என்றும், புதிய தகவல் கிடைத்ததும், உடனே நான் பீற்றரை பணிநீக்கம் செய்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார் பிரதமர் ஸ்டார்மர்.

ஆனால், லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த விடயம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோ, பீற்றர் விடயத்தை ஸ்ட்ராமர் மூடி மறைத்துவிட்டார் என்கிறார்கள். ஆக, பீற்றர் விவகாரத்தால் ஸ்டார்மரின் பிரதமர் பதவிக்கு ஆபத்து வரலாம் என கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US