ட்ரம்பின் ஈரான் போரை ஏற்க முடியாது... கெய்ர் ஸ்டார்மர் மீண்டும் வெளிப்படை
டொனால்ட் ட்ரம்பின் ஈரான் போர் என்பது யோசித்து முடிவு செய்யப்படவில்லை என்பதால் அவற்றை நிராகரிப்பதற்கான தனது முடிவில் மற்றமில்லை என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தமக்கு உடன்பாடில்லை
அதிகரித்து வரும் நெருக்கடி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்த பிரதமர் ஸ்டார்மர், ஆரம்பத்தில் இருந்தே பிரித்தானியா தலையிட மறுத்ததில் ஜனாதிபதி ட்ரம்ப் மகிழ்ச்சியாக இல்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

மேலும், அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடுகளின் மெளனம் தொடர்பில் அமெரிக்காவின் போர் செயலாளர் பீட் ஹெக்செத் இன்று விமர்சனம் செய்துள்ளார்.
இந்த நிலையில், போர் தொடுக்கப்பட்டு ஒரு நாட்டின் ஆட்சியைக் கவிழ்ப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்பதை ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
மட்டுமின்றி, பிரித்தானியாவின் தேசிய நலன் தொடர்பில் முடிவெடுப்பது எனது கடமை. அதைத்தான் நான் செய்துள்ளேன், நான் அதில் உறுதியாக இருக்கிறேன் என்றும் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரித்தானியாவின் தளங்களை அமெரிக்கா ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதி அளித்த விவகாரத்தில் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்டார்மர், பிரித்தானியாவின் தளங்களைப் பயன்படுத்துவது ஒப்புக்கொள்ளப்பட்ட தற்காப்பு நோக்கங்களுக்கு மட்டுமே... நாம் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் ஒரு உறுப்பு நாடாக சேரவில்லை என்றார்.
முன்னதாக, ஜனாதிபதி ட்ரம்ப், ஸ்டார்மரைப் பற்றி மிகவும் ஏமாற்றமடைந்ததாக கூறினார் - அவர் தனது முடிவை மாற்றி தாக்குதலை அனுமதிக்க மிக நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார் என்று புகார் கூறினார்.

பேச்சுவார்த்தை
அத்துடன், அமெரிக்காவின் கோரிக்கையை பிரித்தானியா தொடக்கத்தில் நிராகரித்திருப்பது என்பது முன்னெப்போதும் நடந்ததில்லை என்றார். இதனிடையே, பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்த பிரதமர் ஸ்டார்மர்,
வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள தங்களது மக்களைப் பாதுகாக்கவும், அருகிலுள்ள அதன் நட்பு நாடுகளுக்கு உதவவும் பிரித்தானியா தொடர்ந்து செயல்படும் என்றார்.

அத்துடன் பிரித்தானியாவில் யூத மற்றும் முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றார். இந்த நிலையில், நேற்றிரவு ஸ்டார்மரின் அறிவிப்புக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே சைப்ரஸில் உள்ள பிரித்தானியாவின் தளம் ஈரானிய ட்ரோன்களால் குறிவைக்கப்பட்டது, இருப்பினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஈரான் நிர்வாகம் அதன் அண்டை நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், இராணுவ வீரர்கள் உட்பட 300,000 க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் வளைகுடாவில் ஆபத்தில் சிக்கியிருப்பதாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |