புலம்பெயர்தல் தொடர்பில் மோசமாக விமர்சித்த பிரபலம்: மன்னிப்புக் கேட்க பிரதமர் வலியுறுத்தல்

United Kingdom Keir Starmer
By Balamanuvelan Feb 12, 2026 05:17 AM GMT
Report

புலம்பெயர்தலுடன் தொடர்புபடுத்தி பிரித்தானியா குறித்து விமர்சித்த பிரபலம் ஒருவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என பிரதமர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.

புலம்பெயர்தல் தொடர்பில் விமர்சனம்

பிரித்தானிய பிரதமர் புலம்பெயர்தலை சரியான முறையில் கையாளவில்லை என ஏற்கனவே விமர்சனம் இருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப்போல விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார் பிரபலம் ஒருவர். 

புலம்பெயர்தல் தொடர்பில் மோசமாக விமர்சித்த பிரபலம்: மன்னிப்புக் கேட்க பிரதமர் வலியுறுத்தல் | Starmer Urge Jim Ratcliffe To Apologise

அவர், INEOS என்னும் பிரம்மாண்ட பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தை நிறுவியவரும், மான்செஸ்டர் யுனைட்டட் கால்பந்து அணியின் இணை உரிமையாளருமான பிரித்தானிய கோடீஸ்வரர் சர் ஜிம் ராட்க்ளிஃப் (Sir Jim Ratcliffe) என்பவர் ஆவார்.

2018ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி, அப்போது பிரித்தானியாவிலேயே பணக்காரராக இருந்த சர் ஜிம்முடைய சொத்து மதிப்பு அப்போது 21.05 பில்லியன் பவுண்டுகள் ஆகும். 

தீவிரமடையும் ரஷ்ய அச்சுறுத்தல்... நோர்வேயில் துருப்புக்களை அதிகரிக்கும் பிரித்தானியா

தீவிரமடையும் ரஷ்ய அச்சுறுத்தல்... நோர்வேயில் துருப்புக்களை அதிகரிக்கும் பிரித்தானியா

சமீபத்தில் பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சர் ஜிம், பிரித்தானியா புலம்பெயர்ந்தோரால் காலனித்துவப்படுத்தப்பட்டுள்ளது என்றும், பிரதமர் ஸ்டார்மர், நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்காக கடினமான நடவடிக்கைகளை எடுக்க இயலாத, மென்மையானவராக உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

அதாவது, பிரித்தானியா புலம்பெயர்ந்தோரால் நிரம்பி வழிவதாகவும், அவர்களால் நாட்டின் பொருளாதாரமும் சமுதாயமும் அழுத்தத்திற்குள்ளாவதாகவும், பிரதமரோ, புலம்பெயர்தல் தொடர்பில் கடினமான நடவடிக்கைகள் எடுக்க இயலாத நிலையில் உள்ளார் என்றும் கூறியுள்ளார் சர் ஜிம். இந்நிலையில், சர் ஜிம் புலம்பெயர்தல் குறித்து தெரிவித்த கருத்துக்கள் காயப்படுத்தக்கூடியவை என்றும் தவறானவை என்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் விமர்சித்துள்ளார்.

மேலும், பிரித்தானியா, பெருமை, சகிப்புத்தன்மை மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடு என்றும் கூறியுள்ள பிரதமர் ஸ்டார்மர், சர் ஜிம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

புலம்பெயர்தல் தொடர்பில் மோசமாக விமர்சித்த பிரபலம்: மன்னிப்புக் கேட்க பிரதமர் வலியுறுத்தல் | Starmer Urge Jim Ratcliffe To Apologise

அத்துடன், பிரதமர் இல்ல செய்தித்தொடர்பாளரும், சர் ஜிம்மின் கருத்துக்கள், நமது நாட்டைப் பிரிக்க விரும்புவோர் வாய்க்கு, மெல்லுவதற்கு அவல் கிடைத்ததுபோல் அமைந்துவிடும் என்று கூறியுள்ளதுடன், அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சர் ஜிம்முடைய கருத்துக்களுக்கு கட்சி பேதமின்றி பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்டெல்லா க்ரீஸி என்பவர், பிரித்தானியாவுக்கும், ஏன், சர் ஜிம் இணை உரிமையாளராக இருக்கும் அவரது சொந்த கால்பந்து அணிக்கும், புலம்பெயர்ந்தோர் அளித்துள்ள பங்களிப்பை அவர் புரிந்துகொண்டதுபோல் தெரியவில்லை என கூறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US