யூத ஆலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்: பிரித்தானிய பிரதமர் வழங்கிய உறுதி
பிரித்தானியாவில் அதிகரிக்கும் யூத வெறுப்பு அரசியல் முறியடிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
யூத ஆலயத்தின் மீது தாக்குதல்
வடக்கு மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பார்க் யூத ஆலயத்தில் இன்று காலை 9.31 மணி அளவில் நடத்தப்பட்ட திடீர் பயங்கரவாத தாக்குதலில் இரண்டு யூதர்கள் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தாக்குதல் தொடங்கப்பட்ட 7 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தாக்குதல்தாரியை சுட்டுக் கொன்றனர்.
ஆரம்பத்தில் தாக்குதல்தாரி வெடிகுண்டு அணிந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டாலும், பின்னர் அந்த பொருட்கள் செயல்படாதது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் உறுதிமொழி
இந்நிலையில் பிரித்தானியாவில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு வெறுப்பை முறியடிக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் உறுதி எடுத்துள்ளார்.
யூத ஆலயத்தின் மீதான தாக்குதலுக்கு பிறகு டவுனிங் தெருவில் பேசிய ஸ்டார்மர், பிரித்தானியாவில் யூத எதிர்ப்பு மீண்டும் தலைதூக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவை கட்டாயம் முறியடிக்கப்பட வேண்டும் என்றும் உறுதி எடுத்துள்ளார்.
அத்துடன் இந்த தாக்குதலில் ஈடுபட்டவரின் நோக்கம் தெளிவாக தெரிவதாகவும், அது யூதர்கள் மீதான தாக்குதல் மற்றும் பிரித்தானியாவின் விழுமியங்கள் மீதான தாக்குதல் என பிரதமர் கீர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |