ஓடுதளத்தில் இருந்து விலகி கடலுக்குள் பாய்ந்த விமானம்: 55 பயணிகளின் நிலை என்ன?
அவசர தரையிறக்கத்தின் போது விமானம் ஓடுதள பாதையை கடந்து கடலில் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலில் பாய்ந்த விமானம்
செவ்வாய்க்கிழமை சோமாலியாவில் ஸ்டார்ஸ்கி ஏவியேஷனுக்கு(Starsky Aviation) சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மொகடிஷூவின் ஆதன் அப்துல்லே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வடக்கே உள்ள கால்காயோ நகரை நோக்கி செல்ல திட்டமிட்டிருந்தது.
விமானப் பயணம் தொடங்கி 15 வது நிமிடத்திலேயே விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மொகடிஷூவின் ஆதன் அப்துல்லே சர்வதேச விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறங்க முயற்சித்தது.
Today, a passenger aircraft operated by Starsky Aviation Ltd was involved in an incident near Aden Adde International Airport shortly after take-off. The plane, carrying 50 passengers bound for Guriel and Galkaayo, developed mechanical problems about 15 minutes into the flight… pic.twitter.com/9MaUeJ5UWw
— AUSSOM (@aussom_) February 10, 2026
இந்த அவசர தரையிறக்கத்தின் போது விமானம் ஓடுதளப் பாதையை கடந்து கட்டுப்பாட்டை மீறிய அருகில் இருந்த கடலுக்குள் பாய்ந்தது.
இந்திய பெருங்கடலின் ஆழமற்ற கடற்கரைப் பகுதியில் விமானம் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
விமானத்தில் பயணித்த 55 பயணிகளும் காயமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
விசாரணை தீவிரம்
விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து வெளியான புகைப்படங்களில் விமானத்தின் இறக்கை ஒன்று உடைந்து இருப்பதையும், விமானத்தின் முக்கிய பகுதிகள் பெரிய சேதம் எதுவும் இல்லாமலும் இருப்பதை பார்க்க முடிகிறது.

விபத்து ஏற்பட காரணமாக இருந்த தொழில்நுட்ப காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும் இந்த பயங்கர சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமான குழுவினர் என யாருக்கும் எந்தவொரு காயங்களோ, மரணங்களோ இல்லை என்று ஸ்டார்ஸ்கி ஏவியேஷன் CEO அகதுமது நூர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |