ட்ரம்பின் அழுத்தம்... ரஷ்யாவைத் தவிர்த்த இந்திய எண்ணெய் நிறுவனங்கள்
ட்ரம்ப் நிர்வாகத்தின் 50 சதவீத வரியை தவிர்க்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவே கூறப்படுகிறது.
22 மில்லியன் பீப்பாய்கள்
சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவைத் தவிர்த்து, வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை ரஷ்யாவைத் தவிர மற்ற நாடுகளிலிருந்து குறைந்தது 22 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வாங்கியுள்ளன.
இவை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியா வந்து சேரும் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை வாங்கினால் இந்தியா மீது அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியதைத் தொடர்ந்து, ஜூலை மாத இறுதியில் இந்த நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தின.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 2 மில்லியன் பீப்பாய்கள் அமெரிக்க மார்ஸ் கச்சா எண்ணெயையும், 2 மில்லியன் பீப்பாய்கள் பிரேசிலிய தர எண்ணெயையும், 1 மில்லியன் பீப்பாய்கள் லிபிய கச்சா எண்ணெயையும் வாங்கியது.
வரியைத் தவிர்ப்பதற்கான
மேலும், மத்திய கிழக்கு, அமெரிக்கா, கனடா மற்றும் நைஜீரியாவிலிருந்து செப்டம்பர் மாத விநியோக கச்சா எண்ணெயை 8 மில்லியன் பீப்பாய்கள் வாங்கியது. மறுபுறம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் துபாய் விலைப்பட்டியலை விட அதிகமாக high-sulfur Mars கச்சா எண்ணெயை பீப்பாய்க்கு 1.5 முதல் 2 டொலர் விலையில் விற்றது.
மட்டுமின்றி, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செப்டம்பர் வருகைக்காக பேச்சுவார்த்தைகள் மூலம் 9 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வாங்கியது. இதில் 1 மில்லியன் பீப்பாய்கள் அங்கோலா கிராசோல், 1 மில்லியன் பீப்பாய்கள் யு.எஸ். மார்ஸ், 3 மில்லியன் பீப்பாய்கள் அபுதாபி மர்பன் மற்றும் 2 மில்லியன் பீப்பாய்கள் நைஜீரிய எண்ணெய் ஆகியவை அடங்கும்.
அமெரிக்காவுடன் மோதல் போக்கை முன்னெடுக்காமல், அதன் கச்சா எண்ணெய் கொள்முதலை பன்முகப்படுத்த இந்தியா தெரிவு செய்துள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இது 50% அமெரிக்க வரியைத் தவிர்ப்பதற்கான மற்றொரு வழியாகவும் பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |