சிறைபிடிக்கப்பட்டுள்ள மியான்மர் தலைவர் ஆங் சாங் சூ கி வெளியிட்ட முக்கிய அறிக்கை
மியான்மர் இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அந்நாட்டு தலைவர் ஆங் சாங் சூ கி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 2020-ல் மியான்மரில் நடந்த பொதுத் தேர்தலில் National League for Democracy (NLD) கட்சியின் தலைவர் ஆங் சான் சூ கி வெற்றிப்பெற்றார்.
ஆனால், பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததாக அந்நாட்டு இராணுவம் குற்றம்சாட்டியது.
இதனிடையே இன்று காலை திடீர்சோதனையில் ஈடுபட்ட மியான்மர் இராணுவம், ஆளுங்கட்சி தலைவர் ஆங் சாங் சூ கி, ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிக தலைவர்களை சிறைபிடித்து வைத்துள்ளது.
மியான்மர் இராணுவத்தின் நடவடிக்கைக்கு அமெரிக்க உட்பட பல உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆங் சான் சூ கி சார்பாக NLD கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பை ஏற்றுக் கொள்ளக்கூடாது எனவும், இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுக்குமாறு கட்சியின் தலைவர் ஆங் சான் சூ கி வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் நடவடிக்கைகள் நாட்டை மீண்டும் ஒரு சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள்.
இதை ஏற்றுக்கொள்ள வேண்டாம், இராணுவத்தின் சதித்திட்டத்திற்கு எதிராக முழு மனதுடன் எதிர்ப்பு தெரிவித்து போராட வேண்டும் என ஆங் சான் சூ கி வலியுறுத்தியுள்ளதாக NLD கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.