பணி நேரம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த புள்ளி விவரம்
இந்தியாவில் தொழிலாளர்களின் பணி நேரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் புள்ளிவிவரம் பற்றிய தகவல் வந்துள்ளது.
எத்தனை மணிநேரம்?
பணி நேரம் தொடர்பாக எல் அண்ட் டி நிறுவனத்தின் சேர்மன் எஸ்.என். சுப்ரமணியன் கூறுகையில், "பணியாளர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்க வைக்க முடியவில்லை என்று நான் வருத்தப்படுகிறேன்.
வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? மனைவி எவ்வளவு நேரம் கணவரை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள்.
சீனர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்கிறார்கள், அதே சமயம் அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள்.
நீங்கள் உலகின் டாப்பில் இருக்க வேண்டும் என்றால், வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும்" என்றார். இவரின் கருத்துக்கு பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் தொழிலாளர்கள் சராசரியாக எத்தனை மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்பது குறித்த தகவல் வந்துள்ளது.
இந்தியாவில் ஒரு தொழிலாளி சராசரியாக ஒவ்வொரு வாரமும் 46.7 மணி நேரம் வேலை செய்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இதன் மூலம், உலகில் டாப் 10 பொருளாதார நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சீனா 46.1 மணி நேரம், பிரேசில் 39 மணி நேரம், அமெரிக்கா 38 மணி நேரம், ஜப்பான் 36.6 மணி நேரம் வேலை செய்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |