எப்ஸ்டீன் கோப்புகளில் அரைகுறை ஆடை இளம்பெண்களுடன் பிரபல அறிவியலாளரின் புகைப்படம்
எப்ஸ்டீன் கோப்புகளில், உலகப்புகழ் பெற்ற பிரபல அறிவியலாளர் ஒருவர், அரைகுறை ஆடை இளம்பெண்களுடன் காணப்படும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.
அரைகுறை ஆடை இளம்பெண்களுடன் பிரபல அறிவியலாளர்
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுவரும் எப்ஸ்டீன் கோப்புகளால் இன்னும் எத்தனை பிரபலங்களின் முகத்திரைகள் கிழியப்போகிறதோ தெரியவில்லை.

ஏராளமான இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்து, பல பிரபலங்களுக்கு விருந்தாக்கிய அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என, இளவரசர் ஆண்ட்ரூ முதலான பிரித்தானிய பிரபலங்கள், பில் கிளிண்டன் முதலான சில அமெரிக்க பிரபலங்கள், மைக்கேல் ஜாக்சன் போன்ற இசைத்துறை ஜாம்பவான்கள் என பலரது பெயர்கள் கொண்ட பட்டியல் நீண்டுகொண்டே போகும் நிலையில், பிரபல அறிவியலாளர் ஒருவரும் எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற இயற்பியல் நிபுணரான பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாக்கிங், எப்ஸ்டீனுக்கு சொந்தமான தீவில் அரைகுறை ஆடையணிந்த இரண்டு இளம்பெண்களுக்கு நடுவே காணப்படும் புகைப்படம் முதலான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஒரே விடயம் என்னவென்றால், எப்ஸ்டீனும் ஹாக்கிங்கும் இணைந்திருக்கும் படங்கள் வெளியாகவில்லை.
என்றாலும், எப்ஸ்டீன் கோப்புகளில் 250 முறைக்கும் மேல் ஹாக்கிங் பெயர் இடம்பெற்றுள்ளது.

அதேபோல, இளவரசர் ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணான விர்ஜினியா தொடர்பில், ஹாக்கிங் குறித்து எப்ஸ்டீன் பேசும் விடயம் இடம்பெற்றுள்ள மின்னஞ்சல் ஒன்றும் வெளியாகி, எப்ஸ்டீனுக்கும் ஹாக்கிங்குக்கும் தொடர்பு இருந்ததை உறுதி செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |