எலான் மஸ்க் இல்லாதபோது ட்விட்டர் சிறப்பாக இருந்தது! மீண்டும் சீண்டிய அமெரிக்க எழுத்தாளர்
ட்விட்டரை மஸ்க் வாங்குவதற்கு முன்பு சிறப்பாக இருந்ததாக தான் நினைப்பதாக எழுத்தாளர் ஸ்டீபன் கிங் தெரிவித்துள்ளார்
20 டொலர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா என ஏற்கனவே Blue Tick குறித்து ஸ்டீபன் கிங் கேள்வி எழுப்பி இருந்தார்
பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங் ட்விட்டர் குறித்த பதிவில் எலான் மஸ்க்கை மீண்டும் சீண்டியுள்ளார்.
உலகப் பணக்காரரான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல விதிமுறைகளை அறிவித்து வருகிறார்.
சமீபத்தில் ட்விட்டரில் Blue Tick-ஐ தக்கவைக்க கட்டணம் செலுத்த வேண்டும் என வெளியான செய்தி பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அப்போது அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங் 20 டொலர்கள் செலுத்த வேண்டுமா? அவர் தான் எனக்கு பணம் தர வேண்டும் என்று பதிவிட்டார்.
அதற்கு எலான் மஸ்க், 8 டொலர்கள் இருந்தால் செலுத்துவீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
AP Photo/Mark Lennihan
இந்த நிலையில், ஸ்டீபன் கிங் மீண்டும் தனது ட்விட்டர் பதிவின் மூலம் எலான் மஸ்க்கை சீண்டியுள்ளார்.
அவரது பதிவில், 'மஸ்க் வரும் நாட்களுக்கு முன்பு ட்விட்டர் சிறப்பாக இருந்ததாக நான் நினைக்கிறேன். அப்போது குறைவான சர்ச்சையுடன், அதிக வேடிக்கையாக இருந்தது' என தெரிவித்துள்ளார்.