திடீரென ஓய்வை அறிவித்த ஸ்டீவ் ஸ்மித்: என்ன காரணம்?
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்த சூழலில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியின் மூலம் அறிமுகமான ஸ்மித் 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43.28 சராசரியில் 5,800 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 36 சதமும், 41 அரைசதமும் அடித்துள்ளார்.
ஓய்வுக்கான காரணம்
ஓய்வுக்கு பின்னர் பேசிய ஸ்டீவ் ஸ்மித், "இந்த சிறந்த பயணத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். இந்தப் பயணத்தில் பல அற்புதமான தருணங்களும், நினைவுகளும் இருக்கின்றன.
2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு அணியில் பல இளம் வீரர்கள் தயாராக இருப்பதால், ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பங்களிப்பை கொடுக்க நினைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் மற்றும் மேற்கிந்திய தீவுகள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்." என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |