ஆஷஸில் கம்மின்ஸ் கேப்டன் இல்லை! இவர்தான்.,என்ன காரணம்?
முதல் ஆஷஸ் டெஸ்டில் பேட் கம்மின்ஸுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலிய அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட்
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் நவம்பர் 21ஆம் திகதி தொடங்குகிறது. 
இதில் விளையாட உள்ள அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. பேட் கம்மின்ஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் பெர்த்தில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பேட் கம்மின்ஸ் (Pat Cummins) விளையாடமாட்டார் என்று தெரிய வந்துள்ளது.
கரீபியன் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட முதுகு வலியில் இருந்து அவர் மீண்டு வருகிறார் என்றாலும், அவர் இன்னும் பந்துவீச்சைத் தொடங்கவில்லை.
எனவே அவர் முதல் போட்டியில் விலகியதால், அவருக்குப் பதிலாக ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை
டிசம்பர் 4ஆம் திகதி பிரிஸ்பேனில் தொடங்கும் டெஸ்டில் கம்மின்ஸ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
இரண்டாவது டெஸ்டிற்கு அவர் திரும்புவதில் இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாக தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்தார்.
முன்னதாக தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் கம்மின்ஸ் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |