விராட் கோலி பேட்டில் சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித்: தினேஷ் கார்த்திக் கூறிய சுவாரஸ்ய தகவல்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருவருக்கும் இடையிலான நட்பு பாலம் குறித்து தினேஷ் கார்த்திக் சுவாரஸ்சியமான தகவலை தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் கூறிய விடயம்
இந்திய அணி வீரர் விராட் கோலி களத்தில் எதிரணி வீரர்களிடம் ஆக்ரோஷமாக இருந்தாலும் களத்திற்கு வெளியே மிகவும் இனிமையாக நட்பு பாராட்ட கூடிய பண்பு கொண்டவர்.
அப்படி விராட் கோலி நட்பு பாராட்ட கூடியவர்களில் முக்கியமான ஒருவர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித், இருவரும் இடையிலான நட்புறவு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.
ஆனால் இருவருக்கும் இடையிலான நட்பில் ரசிகர்களுக்கு தெரியாத விஷயம் ஒன்றை இந்திய கிரிக்கெட் அணி வீரரும், வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி பேட்டில் சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித்
அதில் கடந்த 2023ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் உலக கோப்பை தொடர் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்திடம் விராட் கோலி பெயர் பதித்த பேட்டினை பார்த்தேன்.
இது தொடர்பாக அவரிடம் பேசிய போது, இப்போது நிறைய போட்டிகள் அவருடைய பேட்டில் தான் விளையாடுகிறேன், ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி மற்றொரு பேட்டினை அனுப்புவார் என காத்து இருக்கிறேன் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவே இருவருக்கும் இடையிலான நட்புறவு மற்றும் மரியாதையை காட்டுகிறது என தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டார்.
விராட் கோலி வழங்கிய பேட்டினை கொண்டு தான் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் உலக கோப்பை சாம்பியன்ஷிப் தொடரில் சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |