சினிமா பாணியில் காவல் நிலையத்திற்குள் காரை விட்ட நபர்: இளைஞர் மீது பாய்ந்த வழக்குகள்
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஆண் ஒருவர் காவல் நிலையத்திற்குள் காரை மோதச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையத்திற்குள் பாய்ந்த கார்
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் ஜான் ஹார்க்ரீவ்ஸ் என்ற 34 வயது நபர் காரை காவல் நிலையத்திற்குள் மோதச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 20ம் திகதி நடந்த இந்த சம்பவத்தின் போது ஜான் ஹார்க்ரீவ்ஸ் தனது காரில் சத்தமாக பாடல்களை ஒலிக்க விட்டு சாலையில் தாறுமாறாக காரை ஓட்டியுள்ளார். அத்துடன் கடைசியாக காரை காவல் நிலையத்தின் உள்ளேயே காரை மோதச் செய்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல் படி, இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காவல் நிலையத்தில் இருந்த அதிகாரி ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.
மேலும் இந்த விபத்தில் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் ஜான் ஹார்க்ரீவ்ஸ் காரை விட்டு இறங்கியதும் அவரை மடக்கி பிடித்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவர் மீது பயங்கரவாத செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜான் ஹார்க்ரீவ்ஸ் இதற்கு முன்னதாக அதே நாளில் தனியார் குடியிருப்பு ஒன்றின் உள்ளேயும் தன்னுடைய காரை மோதச் செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி Whatsapp இல் இணையுங்கள். |