இத்தாலியில் ரயில் பாதையில் விழுந்து நொறுங்கிய பேருந்து: விபத்தில் 21 பேருக்கு நேர்ந்த சோகம்
இத்தாலியின் வெனிஸ் நகரில் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து விபத்து
வடக்கு இத்தாலியின் வெனிஸ் நகரை பாலம் மூலம் இணைக்கும் மேஸ்ட்ரே மாவட்டத்தின் சாலையில் இருந்து விலகி பேருந்து ஒன்று ரயில் பாதையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மொத்தம் இதுவரை 21 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 40 பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Pic: Luigi Brugnaro
சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து விபத்தில் சிக்கியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்து இருக்கலாம் என வெனிஸ் மேயர் லூய்கி ப்ருக்னாரோ முன்னர் தெரிவித்து இருந்தார்.
அத்துடன் “இது அழிவுகரமான நிகழ்வு என்றும், வருத்தத்திற்கு வார்த்தைகள் இல்லை எனவும் அவர் தன்னுடைய சமூக வலைதள பதிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஸ்கை இத்தாலியின் தகவல்படி, பேருந்து 15 அடியில் இருந்து மின்சார கம்பியில் பேருந்து விழுந்த பிறகு பெட்டியில் தீ பிடித்தது, இதன் பிறகு 18 உடல்கள் நொறுங்களில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
Pic: @poliziadistato via X
விபத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இத்தாலி பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விபத்தின் மூலம் ரயில் சேவைகளும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WhatsApp இல் இணையுங்கள். |