58 பந்தில் சதம்! 7 சிக்ஸருடன் 121 ரன்..முதல் ஆட்டமே ருத்ரதாண்டவமாடிய ஸ்மித் (வீடியோ)
பிக் பாஷ் லீக்கில் ஸ்டீவன் ஸ்மித் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்தார்.
ஸ்டீவன் ஸ்மித் வாணவேடிக்கை
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் முதலில் துடுப்பாடியது. ஜோஷ் பிலிப் 9 ஓட்டங்களில் வெளியேற, பேட்டர்சன் 12 ஓட்டங்கள் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மொய்சஸ் ஹென்றிக்ஸ் உடன் கைகோர்த்த ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) ருத்ர தாண்டவம் ஆடினார்.
"Shot of the night!"
— KFC Big Bash League (@BBL) January 11, 2025
How good is this from Steve Smith! #BBL14 pic.twitter.com/tdRqZf07Yn
நடப்பு சீசனில் முதல் போட்டியில் களமிறங்கிய ஸ்மித் வாணவேடிக்கை காட்டினார். நாலாபுறமும் சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர், அதிரடி ஆட்டம் மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
அதிரடி சதம்
36 பந்தில் அரைசதம் அடித்த ஸ்மித், அடுத்த 22 பந்துகளிலேயே சதத்தை எட்டினார். இது அவருக்கு 3வது BBL சதம் ஆகும். அத்துடன் 32 இன்னிங்ஸ்களிலேயே இதனை செய்துள்ளார்.
Steve Smith at his very best!#BBL14 pic.twitter.com/yrScFZAiyW
— KFC Big Bash League (@BBL) January 11, 2025
மறுமுனையில் ஹென்றிக்ஸ் 28 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, டென் ட்வர்ஷுய்ஸ் 7 பந்தில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 23 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் சிட்னி சிக்ஸர்ஸ் (Sydney Sixers) அணி 3 விக்கெட்டுக்கு 220 ஓட்டங்கள் குவித்தது. இறுதிவரை களத்தில் நின்ற ஸ்டீவன் ஸ்மித் 64 பந்துகளில் 121 ஓட்டங்கள் குவித்தார். இதில் 7 சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கும்.
100 FOR STEVE SMITH!
— KFC Big Bash League (@BBL) January 11, 2025
That's his third BBL hundred, and he's done this one off just 58 balls 👏 #BBL14 pic.twitter.com/K6iqJ7HmYN
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |