பங்குச் சந்தை என்றால் என்ன? பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி?
பங்குச் சந்தை (Stock Market) என்பது பொதுவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகம் செய்யப்படும் சந்தை ஆகும். இங்கு நிறுவங்களின் பங்குகள் வாங்கப்பட்டு விற்கப்படும்.
பங்கு என்றால் என்ன?
ஒரு நிறுவனத்தை உருவாக்கும் உரிமையாளர், சில வருடங்கள் அதை லாபகரமாக நடத்திய பின், தன் உரிமையைப் பங்குகளாக விற்க முன் வருவார். இதை IPO என்பார்கள்.
அந்த நிறுவனத்தின் பங்குகளை நாம் வாங்கினால், அந்நிறுவனத்தின் லாபத்திலும், வளர்ச்சியிலும் நமக்கும் பங்கு கிடைக்கும்.
நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்டப்பின் பங்கு வியாபாரம் தொடங்கும். அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளையும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடப்புகளையும் பொறுத்து பங்குகளின் விலை அதிகரிக்கும் அல்லது குறையும்.
பங்குச் சந்தையின் வகைகள்
Primary Market: புதிய பங்குகள் IPO மூலம் அறிமுகம் செய்யப்படும் சந்தை
Secondary Market: ஏற்கனவே வெளியிடப்பட்ட பங்குகள் வாங்க/விற்கப்படும் சந்தை
பங்குச் சந்தை முதலீடு
பங்குகளை விற்பதன் மூலம் நிறுவனங்களுக்கு நிதி திரட்ட உதவுகிறது. அந்த பங்குகளை நாம் வாங்குவதன் மூலம் நாம் முதலீட்டாளர்க்காக மாறுகிறோம்.
இவ்வாறு ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதன் மூலம் அந்நிறுவனம் அடையும் லாபம் நஷ்டம் இரண்டிலும் நமக்கு பங்கு உண்டு.
நல்ல லாபம் தரும் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால் நமக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.
பாதுகாப்பான முதலீடுகள்
Mutual Funds: நேரடி பங்கு வாங்காமல், நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் முதலீடு செய்வது.
Diversification (பல்வேறு பங்குகளில் முதலீடு): ஒரே நிறுவனத்தில் முதலீடு செய்வதைவிட, பல நிறுவனங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.
நீண்ட கால நோக்கம்: திடீர் லாபம் எதிர்பார்க்காமல், நிலையான வளர்ச்சியை நோக்கி முதலீடு செய்ய வேண்டும்.
அதேபோல் ஒரு நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு (விலை) குறைவாக இருக்கும்போது அதனை வாங்கி, அந்த பங்குகளின் மதிப்பு அதிகரிக்கும்போது விற்பதும், அல்லது மதிப்பு கூடிக்கொண்டே இருக்கும் பங்குகளை விற்காமல் தக்கவைத்துக்கொண்டு, அதில் கிடைக்கும் லாபத்தை அனுபவிப்பதும் ஒவ்வொரு முதலீட்டாளர்களின் சாமர்த்தியம்.
இந்த சாமர்த்தியமும் திறமையும் பெற, நாம் பங்குச்சந்தையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவையான ஆய்வுகளை தொடந்து செய்யவேண்டும். நாட்டுநடப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள், வர்த்தகங்கள், பொருளாதார மாற்றங்கள் அனைத்தையும் போதுமான அளவிற்கு தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
உலகளாவிய தாக்கங்கள்
உலகத்தின் எதோ ஒரு மூலையில் நடக்கும் மாற்றங்களும், அமெரிக்க போன்று வெளிநாடுகள் எடுக்கும் முடிவுகள், ஏன் சுனாமி, கொரோனா தோற்று போன்ற இயற்கை அசம்பாவிதங்கள் கூட பங்குச்சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் நடக்கும் பொருளாதார மாற்றங்கள் இந்திய பங்குச் சந்தையையும் நேரடியாக பாதிக்கின்றன. அதனால், சர்வதேச செய்திகள் மற்றும் நாணய மாற்று விகிதங்களை கவனிக்க வேண்டும்.
பங்குகளை விற்று நிறுவனங்கள் என்ன செய்யும்?
முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பங்குச் சந்தையில் பங்குகளுக்கு வாங்கி விற்பதன் மூலம் பயனடைகிறார்கள்.
அதேபோல், நிறுவனங்கள் அந்த பணத்தை தங்கள் வணிகங்களை வளர்ப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் பயன்படுத்தும். இதன்மூலம் அந்த நிறுவனமும் லாபங்களை ஈட்டி, முதலீட்டாளர்களுக்கு லாபத்தை தரும்.

Cryptocurrency-ல் முதலீடு செய்கிறீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில கிரிப்டோ வார்த்தைகள் இதோ
பங்குச் சந்தை என்பது சவால்கள் நிறைந்ததொரு உலகம். ஆனால், சரியான தகவல், ஆய்வு மற்றும் பொறுமையுடன் முதலீடு செய்தால், இது நிதி சுதந்திரத்திற்கான ஒரு சிறந்த வழியாக அமையும். முதலீட்டாளர்கள் தங்கள் இலக்குகளை தெளிவாகக் கொண்டு, திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
நேர்மையான தகவல்களுடன், நிதானமான முடிவுகள் மட்டுமே பங்குச் சந்தையில் வெற்றியைத் தரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Stock Market, Stock Market Investment, What is Stock Market in tamil, how Stock Market works in tamil