ஸ்டாக்ஹோமில் 3 பேரின் உயிரை பறித்த பேருந்து விபத்து: ஓட்டுநரை விடுதலை செய்ய உத்தரவு
ஸ்வீடன் தலைநகரில் நடந்த மோசமான பேருந்து விபத்தில் ஓட்டுநர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டாக்ஹோம் பேருந்து விபத்து
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சிலர் மீது பேருந்து இடித்து மோசமான விபத்து அரங்கேறியது.
தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள வால்ஹால்வகேன் தெருவில் நடைபெற்ற இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன், 3 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேருந்து விபத்தை தொடர்ந்து Odengatan மற்றும் Engelbrektsgatan பகுதிகளுக்கு இடைப்பட்ட வால்ஹால்வகேன் சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விடுவிக்கப்பட்ட ஓட்டுநர்
இந்நிலையில் ஸ்டாக்ஹோமில் பேருந்து விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநரை காவலில் இருந்து விடுதலை செய்வதாக ஸ்வீடன் வழக்குத் தொடரும் ஆணையம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
காவல்துறை ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய பிறகு அவரை காவலில் வைக்க எந்த காரணமும் இல்லை என்று ஆணையம் குறிப்பிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதே சமயம் இந்த சம்பவம் திட்டமிட்ட செயல் இல்லை என்று நினைக்க எந்த காரணமும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏனென்றால், விபத்து நடந்த போது சம்பந்தப்பட்ட பேருந்து சேவையில் இல்லை என்றும், பேருந்துக்குள் பயணிகள் இல்லை என்பதையும் உள்ளூர் ஊடக அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |