ஸ்டாக்ஹோமில் பொதுமக்கள் மீது மோதிய பேருந்து: உயிரிழப்புகளை உறுதிப்படுத்திய பொலிஸார்
ஸ்வீடன் தலைநகரில் நடந்த பேருந்து விபத்தில் பொதுமக்கள் பலர் காயமடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீது மோதிய பேருந்து
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பொதுமக்கள் சிலர் மீது பேருந்து இடித்து விபத்து நிகழ்ந்துள்ளது.

தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள வால்ஹால்வகேன் தெருவில் நடைபெற்ற இந்த விபத்தில் பொதுமக்கள் பலர் படுகாயமடைந்து இருப்பதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் விபத்தில் உயிரிழப்புகளும் இருப்பதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்கு புதிய சலுகை: Innovator Founder Visa விண்ணப்பிக்க புதிய விதிமுறை
இருப்பினும், காயமடைந்தவர்கள் யார்? உயிரிழந்தவர்கள் யார்? என்பது குறித்த துல்லியமான தகவல்களை காவல்துறை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

தற்போது சம்பவ இடத்தில் காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆகியோர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேருந்து விபத்தை தொடர்ந்து Odengatan மற்றும் Engelbrektsgatan பகுதிகளுக்கு இடைப்பட்ட வால்ஹால்வகேன் சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |