ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா
பிரித்தானியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டால், ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளையே பிரித்தானியாவு சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
வரம்பை விரிவுபடுத்தினால்
வெள்ளிக்கிழமை இரவு, இந்தியப் பெருங்கடலில் உள்ள தளத்தை நோக்கி ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தளமானது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவால் கூட்டாகச் செயல்படுத்தப்படுகிறது. ஈரானில் இருந்து 2,360 மைல்கள் தொலைவில் அந்த தீவு அமைந்துள்ளது.
ஈரானில் இருந்து 2,609 மைல்கள் தொலைவில் பாரிஸ் நகரமும், 2,750 மைல்கள் தொலைவில் லண்டனும் அமைந்துள்ளது. ஆனால், ஈரான் தனது சிமோர் (Simorgh) விண்வெளி ஏவுதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனது ஏவுகணை வரம்பை விரிவுபடுத்தினால், லண்டனும் பாரிஸ் நகரமும் அதன் தாக்குதல் வரம்புக்குள் வந்துவிடும்.
பிரித்தானியாவின் விமானப்படை தளம் அமைந்துள்ள சைப்ரஸ் தீவானது ஈரானில் இருந்து 1,000 மைல்கள் தொலைவில் உள்ளது. இந்த நிலையிலேயே, ஈரானின் புதிய ஏவுகணை ஐரோப்பாவை தாக்குவது உறுதி என மத்திய கிழக்கு நாடுகளிலேயே அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடான இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
ஈரான், 4,000 கிலோமீற்றர் வரம்புகொண்ட இரு-கட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை, டியாகோ கார்சியா தீவில் அமைந்துள்ள ஓர் அமெரிக்க இலக்கை நோக்கி ஏவியது என IDF-ன் முதன்மை அதிகாரிகளில் ஒருவரான Lt Gen Eyal Zamir காணொளி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்குவதற்காக உத்தேசிக்கப்பட்டவை அல்ல என குறிப்பிட்டுள்ள அவர், அவற்றின் வீச்சு ஐரோப்பியத் தலைநகரங்களை எட்டும் திறன் கொண்டது.

கெய்ர் ஸ்டார்மர் அனுமதி
பெர்லின், பாரிஸ் மற்றும் ரோம் ஆகிய நகரங்கள் அனைத்தும் ஈரானின் நேரடி அச்சுறுத்தல் எல்லைக்குள் உள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் பிரித்தானியாவின் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அனுமதி அளித்த நிலையிலேயே டியாகோ கார்சியா மீது தாக்குதலுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் இரு ஏவுகணைகளும் இலக்கை எட்டும் முன்னர் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரிட்டிஷ் படைகளின் முன்னாள் தலைமைத் தளபதியான ரிச்சர்ட் பாரன்ஸ் குறிப்பிடுகையில்,

ஈரானின் சக்தி குறித்து உலகம் தொடர்ச்சியாகக் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம் என்றார். ஈரானின் ஏவுகணை வரம்பு 1240 மைல்கள் என்றே கருதிய நிலையில், 2,360 மைல்கள் தொலைவில் உள்ள டியாகோ கார்சியா மீது தாக்குதல் முயற்சி நடந்துள்ளது என்றார்.
தற்போதைய சூழலில், இப்படியான ஒரு தாக்குதலை முறியடிக்கும் அமைப்புகள் எதுவும் பிரித்தானியாவிடம் இல்லை என்றும், கண்டிப்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளையே நம்பியிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |