பேராசிரியை தொழிலதிபரான கதை! லட்சக்கணக்கில் மாத வருமானம்
இந்திய மாநிலம், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பேராசிரியை ஒருவர் தொழிலதிபரான கதையை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
கல்லூரியில் பேராசிரியை
உத்தரபிரதேச மாநிலத்தின் ஃபருகத்பாத்தை சேர்ந்தவர் நிதி கட்டரே. இவரது, கணவர் சஞ்சய் கட்டாரே ரிலையன்ஸ் நிறுவனத்தின் கிளை மேலாளர் ஆவார்.
இவர், மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் ஜிவாஜி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார் பின்பு, 2007 ஆம் ஆண்டு தனியார் பல்கலைக்கழத்தில் பயிற்றுவிக்க ஆரம்பித்தார்.
காளான்களை எப்படி வளர்ப்பது போன்ற பகுதிகளை மாணவர்களுக்கு கற்பித்துக் கொடுத்தார். நுண்ணுயிரியலில் எம்.எஸ்.சி பட்டதாரியான நிதி கட்டரேவுக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்கு அவருடைய கணவர் சஞ்சய் கட்டாரே பெரிதும் ஊக்கப்படுத்தினார்.
ஆனால், இவருக்கு 2016 ஆம் ஆண்டு வரை தான் கற்பித்த பாடத்தில் இருந்தே தொழில் தொடங்க போகிறோம் என்பது தெரியாது.
நிறுவனம் தொடக்கம்
இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு நேச்சுரல் பயோ இம்பாக்ட் அண்ட் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கினார். அதற்காக, 10 கிலோ சிப்பி காளான் முட்டைகளுக்கு ரூ.3,000 செலவு செய்து, தனது வீட்டில் 10 அடி பரப்பளவில் வளர்த்தார்.
இதற்கு முன்பு இவர், டெல்லி மற்றும் ஆக்ராவில் உள்ள விவசாயிகளிடம் இருந்து காளான்களை வாங்கிய போது, ஸ்பான்கள் தரமற்றதாக இருக்கிறது என்பதை கண்டறிந்தார்.
பின்னர், 1,500 சதுர அடியில் மூதாதையர் வீட்டில் நொதித்தல், நோய்த்தடுப்பு மற்றும் பேஸ்டுரைசேஷன் ஆகியவற்றிற்கு தனி அறைகளுடன் கூடிய ஆய்வகத்தை அமைத்தார்.
மாதம் ரூ.1.5 லட்சம் வருமானம்
காளான்களை வளர்க்கும் முடிவை தானே எடுத்ததால், மாதத்துக்கு 1,000 கிலோ முட்டைகளை நிதி கட்டரேவால் உருவாக்க முடிந்தது.
இந்த ஸ்பான்களை வைத்து ஆண்டு முழுவதும் சிப்பி காளான்களை வளர்க்க பயன்படுத்தப்பட்டது. இதனை, 150 விவசாயிகள் வாங்குகின்றனர்.
தற்போது, நிதி கட்டரே 2 மாதங்களுக்கு ஒருமுறை 150 கிலோ விளைச்சல் பெறுகிறார். இதனால், சுகாதார நிறுவனங்களுக்கு வெயிலில் உலர்த்தப்பட்ட காளான்களை கிலோவுக்கு ரூ.800 -க்கும், நல்ல தரமான காளான்களை கிலோ ரூ100 -க்கும் விற்பனை செய்கிறார்.
வெயிலில் உலர்த்தப்பட்ட காளான்கள், முட்டைகள் மற்றும் புரதப் பொடி, ஊறுகாய் மற்றும் காளான்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் போன்ற தனித்துவமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் நிதி கட்டரே மாதம் ரூ.1.5 லட்சம் வருமானம் பெறுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |