ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டுமா? அமெரிக்கா இதனை மாற்ற கொள்ள வேண்டும்: ஈரான் திட்டவட்டம்
அமெரிக்கா தன்னுடைய கொள்கையை மாற்றினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது சாத்தியம் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது எப்போது?
உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து ஈரான் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
அதில், அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் ஈரான் மீதான அதன் இராஜதந்திர நிலைப்பாட்டையும் ராணுவ நிலைப்பாட்டையும் மாற்றிக் கொள்ளாத வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு தான் இருக்கும் என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவை அறிவித்துள்ளது.

ஹார்முஸ் வழித்தடத்தை மீண்டும் தடையின்றி இயக்க அமெரிக்கா நிபந்தனையின்றி நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை பேரவையின் செயலாளர் மொஹம்மது பாகர் சோல்கத்ர் சனிக்கிழமையன்று விளக்கினார்.
ஈரானின் கோரிக்கைகள்
அதில், ஈரான் மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா விடுக்கும் எச்சரிக்கைகள் மற்றும் அவதூறு பேச்சுக்கள் நிறுத்தப்பட வேண்டும்.
ஈரானின் நட்பு நாடுகளான லெபனான், யேமன், ஈராக் மற்றும் பாலஸ்தீனம் மீதான ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடற்படை முற்றுகையை நீக்க வேண்டும், மேலும் வெளிநாடுகளில் உள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |