கட்டணங்கள் இல்லாமல் ஹார்முஸ் முழுமையாக திறக்கப்படும்: டிரம்ப் உறுதி
ஹார்முஸ் நீரிணை இனி கட்டணமில்லா பாதையாக இருக்கும் என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் முழுமையாக திறக்கப்படும்
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அமெரிக்கா - ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என்றும், அதன்படி வெள்ளிக்கிழமை முதல் ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டாம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆரம்பக்கட்ட 60 நாட்களுக்கு பிறகும் ஹார்முஸ் ஜலசந்தியில் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது என்று டிரம்ப் தெளிவுப்படுத்தினார்.
மேலும் ஈரானிடம் எந்தவொரு அணு ஆயுதங்களும் இருக்க கூடாது என்பதை இருதரப்புக்கும் இடையிலான ஒப்பந்தம் தெளிவாக வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால திட்டங்கள் குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை ஈரானுடன் விரைவாக நடத்த அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருதரப்பிற்கும் இடையிலான இறுதி ஒப்பந்தம் எட்டப்பட 60 நாட்களுக்கு மேல் ஆகலாம் என்றும் அல்லது குறையலாம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |