நடுக்கடலில் தவித்த இந்திய கப்பலுக்கு உதவிய பாகிஸ்தான் கடற்படை
நடுக்கடலில் தவித்த இந்திய கப்பலுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவியுள்ளது.
இந்திய கப்பலுக்கு உதவிய பாகிஸ்தான் கடற்படை
ஓமனில் இருந்து இந்தியாவை நோக்கி அரபிக்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த எம்.வி கவுதம் என்ற கப்பல் அரபிக்கடலில் பயணித்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்தது.

மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையம், பாகிஸ்தான் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளனர்.
பிஎம்எஸ்எஸ் காஷ்மீர் என்ற கப்பலை அனுப்பி பாகிஸ்தான் கடற்படை அந்த கப்பலில் இருந்த 6 இந்தியர் மற்றும் 1 இந்தோனேசியர் உள்ளிட்ட 7 மாலுமிகளுக்கு உதவி வழங்கியது.
#Pakistan Navy has rescued a stranded #Indian crew in a #humanitarian operation in the Arabian Sea following an SOS alert.
— Gulf Times (@GulfTimes_QATAR) May 5, 2026
Acting on a distress signal from Mumbai MRCC, Pakistan Navy frigate “Kashmir” was promptly deployed to assist the Indian vessel MV Gautam.
The ship… pic.twitter.com/deloojVoUI
மேலும், உணவு, மருத்துவ உதவி மற்றும் தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட அவசரகால உதவிகளை பாகிஸ்தான் கடற்படை வழங்கியது.
இதே போல் கடந்த ஆண்டும் அரபிக்கடலில் தவித்து கொண்டிருந்த 18 மாலுமிகள் அடங்கிய வர்த்தக கப்பல் ஒன்றை பாகிஸ்தான் கடற்படை மீட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |