மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? அப்போ தினமும் இப்படி செய்து பாருங்க!
பெரும்பாலும் இன்றைய சமூகத்தினர்கள் உள்ளாகும் ஒரு பெரிய பிரச்சினை மனஅழுத்தம். அதில் இருந்து வெளிவர வெவ்வேறு முயற்சிகளை எடுத்து இருப்பீர்கள்.
மனஅழுத்தம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒரு சிலர் அழுவார்கள். ஒரு சிலர் நன்றாக சாப்பிடுவார்கள்.
இவ்வாறு வித்தியாசமான முறையை செய்தாலும் பொதுவாக ஒரு பிரச்சினையாக இருப்பது மூளை தான்.
ஆம். மனஅழுத்தத்தில் இருந்தால் அது மூளையை சீக்கிரமாக பாதித்துவிடும்.
இதில் இருந்து எவ்வாறு நாங்கள் வெளிவரலாம் என்று தெரிந்துக்கொள்வோம் இந்த பதிவின் மூலம்.
1. உடற்பயிற்சி
மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்கு வேகமாக இதய துடிப்பு இருக்கும். ஆகவே 20 ஜம்பிங் ஜாக்குகள், 10 புஷ்அப்கள் அல்லது சிட்-அப்கள் அல்லது 30 நிமிடங்கள் நடந்தாலும் நல்லது.
2. மசாஜ்
மசாஜ் செய்தால் தசைகளில் உள்ள பதற்றத்தை சரிசெய்யும். தோலில் உணர்திறன் ஏற்பிகள் நம் மூளைக்கு செய்திகளை அனுப்புகின்றன. உங்கள் உடலில் எந்த இடத்தில் நீங்கள் பதற்றமாக உணர்கிறீர்கள் என்பதையும் இது உங்களுக்குத் தெரியப்படுத்துகிறது, எனவே நீங்கள் அந்த பகுதிகளை மசாஜ் செய்யலாம்.
3. நடனம்
வாழ்க்கையில் மகிழ்ச்சியான நேரம் மற்றும் இடத்திலிருந்து இசைக்கு நடனமாடுவது நேர்மறையான நினைவுகளைத் தூண்டும், மேலும் மன அழுத்தத்தில் இருந்து உங்களை விடுவிக்கும்.
4. குளித்தல்
உடல் வெப்பநிலையை மாற்றுவதன் மூலம், இது முழு உணர்வின் வேகத்தைக் குறைக்கிறது. வாசனையான சோப்பு அல்லது மெல்லிய இசையை கேட்டுக்கொண்டு குளிக்கலாம்.
5. உடலுறவு
மனஅழுத்தம் கொடுக்காத ஒருவருடன் திருப்திகரமான உறவில் இருக்கும் தம்பதிகளுக்கு உடலுறவு மன அழுத்தத்தை குறைக்கும்.
6. துப்பரவு செய்தல்
மனஅழுத்தத்தில் இருந்து வெளிவர ஒரு சிறந்த வழியாக இதை செய்யலாம். வீட்டை துப்பரவு செய்வதன் மூரம் மனதில் உள்ள அழுத்தம் குறைவடையும். மேலும் அதை மறந்து வேளையில் ஈடுபடுவீர்கள்.
7. வரைதல்
உங்களுக்கு மனதில் தோன்றுவதை வரைந்து பார்த்துக்கொண்டிருந்தால் மனஅழுத்தத்தில் இருந்து வெளிவரலாம்.
8. தூக்கம்
ஆம். முழுமையான நிம்மதியா ஒரு தூக்கம் இருந்தாலே போதும். அனைத்துவிதமான மனஅழுத்தத்தில் இருந்தும் வெளிவர முடியும். நன்றாக தூங்கினால் அன்றைய நாளில் நிகழந்த விடயத்தை மறந்து, நிம்மதியாக இருக்க முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |