கனடாவில் புலம்பெயர்தலை பாதித்த வேலைநிறுத்தம்: வெளியாகியுள்ள நல்ல செய்தி
கனடாவில் 155,000 அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், அதனால் பாதிக்கப்பட்ட பல்வேறு முக்கிய விடயங்களில் புலம்பெயர்தல் தொடர்பான பணிகளும் அடக்கம்.
அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம்
ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி, The Public Service Alliance of Canada (PSAC) என்னும் அரசு ஊழியர்கள் யூனியன் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, கனடாவில் 155,000 அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
PSAC has reached a tentative agreement for the PA, SV, TC and EB bargaining units at Treasury Board.
— PSAC-AFPC (@psac_afpc) May 1, 2023
Members in the PA, SV, TC and EB bargaining groups are required to return to work for their next scheduled shift, beginning May 1 at 9 a.m. ET
Read more: https://t.co/sgsgv65FBl
ஊதிய உயர்வு, வீடுகளிலிருந்து வேலை செய்தல் தொடர்பான சில கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதனால் பாதிக்கப்பட்ட பல்வேறு முக்கிய விடயங்களில் புலம்பெயர்தல் தொடர்பான பணிகளும் அடக்கம்.
முடிவுக்கு வந்த வேலைநிறுத்தம்
இந்நிலையில், மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு The Public Service Alliance of Canada (PSAC) யூனியன், ஊழியர்களைக் கேட்டுக்கொண்டதையடுத்து, நேற்று காலை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்பினர்.
பெடரல் அரசுக்கும் அரசு ஊழியர்கள் யூனியனுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், வேலைநிறுத்தத்தின் தாக்கம், சில சேவைகள் மீது இன்னும் சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை இருக்கும் என்று கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.