எல்-நினோ தாக்கம்: 4.9 கோடி மக்கள் பட்டினியில் வாடலாம்- ஐ.நா.

Food Shortages El Niño
By Ragavan Aug 05, 2026 04:07 PM GMT
Report

எல்-நினோவின் தாக்கத்தால் உலகில் 4.9 கோடி மக்கள் பசிப் பட்டினியில் வாடலாம் என ஐ.நா. எச்சரித்துள்ளது.

4.9 கோடி மக்கள்

உலக உணவு திட்டம் (WFP) வெளியிட்ட புதிய அறிக்கையில், வலுவான எல்-நினோ வானிலை நிகழ்வு காரணமாக, உலகில் அதிகமாக பாதிக்கப்படவுள்ள பல பகுதிகளில் கூடுதலாக 4.9 கோடி மக்கள் பசியின் கோரப்பிடியில் சிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, தற்போது 45 நாடுகளில் 22 சதவீதம் அதிகரிப்புடன் மொத்தம் 274 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ள நேரிடும் அபாயம் உள்ளது.

Strong-El-Nino-May-Trigger-Global-Hunger

மத்திய அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்திய அமெரிக்காவில் 83 சதவீதம் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் 75 சதவீதம் வரை பசியால் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என WFP தெரிவித்துள்ளது.

எல்-நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் இயற்கை நிகழ்வு. இது உலகளாவிய வானிலை மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. ஆப்பிரிக்காவில் வறட்சி, ஆசியாவில் மழை தாமதம், சில பகுதிகளில் வெள்ளம் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.

கனடாவில் Mrs Canada World 2026 பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண்

கனடாவில் Mrs Canada World 2026 பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண்

WFP அதிகாரி ஜீன்-மார்டின் பவுயர் கூறியதாவது:

“இத்தகைய நிகழ்வுகள் கடந்த காலங்களில் பெரிய அளவிலான பசியை தூண்டியுள்ளன. எனவே, முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது அவசியம்” என எச்சரித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிதி உதவிகளில் ஏற்பட்ட குறைவு காரணமாக, உணவு பாதுகாப்பு தொடர்பான தரவுகள் சேகரிப்பில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இது எதிர்கால பசி நெருக்கடிகளை அடையாளம் காண சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டது.

WFP, தற்போது 18 நாடுகளில் முன்கூட்டிய நடவடிக்கை திட்டங்களை விரிவுபடுத்தி, 13 லட்சம் மக்களுக்கு பண உதவி மற்றும் பிற ஆதரவுகளை வழங்கி வருகிறது.

ஆசியாவில் தங்கம் மீது அதிகரிக்கும் முதலீடு- வங்கிகளில் புதிய சேவைகள் அறிமுகம்

ஆசியாவில் தங்கம் மீது அதிகரிக்கும் முதலீடு- வங்கிகளில் புதிய சேவைகள் அறிமுகம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US