பரபரப்பான ஆஷஸ் 5வது டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி! கடைசி விக்கெட்டை வீழ்த்தி ஹீரோவான ஸ்டூவர்ட் பிராட்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
384 ஓட்டங்கள் இலக்கு
கடந்த 27ஆம் திகதி தொடங்கிய இந்த டெஸ்டில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 283 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 295 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 395 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதால், அவுஸ்திரேலிய அணிக்கு 384 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் கவாஜா 72, வார்னர் 60 என நல்ல தொடக்கம் அமைத்தனர்.
Twitter (CricketAus)
Twitter (CricketAus)
வோக்ஸ் அபாரம் லபுசாக்னே 13 ஓட்டங்களில் வெளியேறிய நிலையில் ஹெட் 43 ஓட்டங்கள் எடுத்தார். அணியின் ஸ்கோர் 274 ஆக உயர்ந்தபோது ஸ்மித் 54 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அதன் பின்னர் அவுஸ்திரேலியா சரிவை சந்தித்தது. வோக்ஸ் மற்றும் மொயீன் அலியின் மிரட்டல் பந்துவீச்சில் அவுஸ்திரேலிய வீரர்கள் அடுத்தது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
A fairytale ending for a legend of the game.
— England Cricket (@englandcricket) July 31, 2023
Broady, thank you ❤️ #EnglandCricket | #Ashes pic.twitter.com/RUC5vdKj7p
ஸ்டூவர்ட் பிராட் மிரட்டல்
எனினும் அலெக்ஸ் கேரி வெற்றிக்காக போராடினார். ஆனால் ஸ்டூவர்ட் பிராட் கடைசி விக்கெட்டாக கேரியை (28) அவுட் செய்து இங்கிலாந்தை வெற்றி பெற வைத்தார்.
Twitter (England Cricket)
அவுஸ்திரேலிய அணி 334 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனதால், இங்கிலாந்து 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-2 என ஆஷஸ் தொடரை சமன் செய்தது. தனது கடைசி டெஸ்டில் விளையாடி ஸ்டூவர்ட் பிராட், அவுஸ்திரேலியாவின் இறுதியான 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹீரோவானார்.
??????? ENGLAND WIN! ???????
— England Cricket (@englandcricket) July 31, 2023
A truly incredible Ashes series comes to an end...
Well played, @CricketAus ? #EnglandCricket | #Ashes pic.twitter.com/W5oL5NrYao
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |