ஆடைகள் இல்லாமல் உடல் முழுவதும் கரி படிந்த நிலையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த இளம்பெண்... ஒன்லைன் டேட்டிங்கால் வந்த வினை
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக, ஒன்லைன் டேட்டிங்கை நாடியுள்ளார் ஒரு அமெரிக்க இளம்பெண்...
ஆனால், கிட்டத்தட்ட வாழ்வையே இழக்கும் ஒரு நிலை வரை அவர் சென்று திரும்ப நேர்ந்தது.
அமெரிக்காவிலுள்ள Utah என்ற இடத்தில் அமைந்திருக்கும் Loa என்ற சிறு நகரத்தில் வெறும் 500 பேர்தான் வாழ்கிறார்கள். அங்கு வாழும் ஒரு கல்லூரி மாணவி Madelyn Allen (19).
மன அழுத்தம் காரணமாக, ஒன்லைனில் டேட்டிங் செய்யும் பழக்கம் Madelynக்கு இருந்திருக்கிறது. டேட்டிங் ஆப் ஒன்றில் Brent Brown (39) என்ற நபரை தொடர்புகொண்ட Madelyn, இம்மாதம் (டிசம்பர்) 13ஆம் திகதி, அவரை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளார். அதன்படி Brent வந்து Madelynஐ அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், மறுநாள் காலைவரை Madelyn தான் தங்கியிருந்த அறைக்குத் திரும்பாததால், அவரது அறைத்தோழி பொலிசாருக்கு புகாரளித்துள்ளார். அவரது மொபைலை ட்ராக் செய்த பொலிசார், சம்பந்தப்பட்ட வீட்டின் கதவைத் தட்ட, கதவைத் திறந்த Brent பொலிசாரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளார்.
பின்னர், கடந்த சனிக்கிழமை, கைது வாரண்ட் ஒன்றுடன் அந்த வீட்டிற்குள் பொலிசார் நுழைய, அந்த வீட்டின் அடித்தளத்தில், ஆடைகள் எதுவும் இல்லாமல், நிலக்கரி படிந்த உடலுடன் Madelyn கிடப்பதைக் கண்டுள்ளனர். உடனடியாக அவரை மீட்ட பொலிசார் அவரை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Brent Brown கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், Madelynயை டேட்டிங் என்ற பெயரில் அழைத்துவந்த Brent, அவரது விருப்பத்துக்கு மாறாக அவரைக் கட்டிப்போட்டு, வன்புணர்ந்து, மீண்டும் உடைகளை அணிந்துகொள்ள அனுமதிக்காததோடு, அவரது மொபைலையும் பிடுங்கி வைத்துக்கொண்டுள்ளார்.
தப்பிச் செல்ல முயன்றால் அவரது பெற்றோர் மற்றும் சகோதரிக்கு தொல்லை கொடுப்பதாக Brent பயமுறுத்த, பயந்து போன Madelyn தப்பிக்க கூட முயற்சி செய்யாமல் அந்த வீட்டின் அடித்தளத்திலேயே கட்டுண்ட நிலையில் கிடந்திருக்கிறார்.
கைது செய்யப்பட்டுள்ள Brent மீது சட்டத்துக்கு இடையூறு செய்தது, கடத்தல், வன்புணர்வு முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.