நேபாள வெள்ளத்தில் மாயமான பெற்றோர் - கண்ணீருடன் நீட் தேர்வு எழுதிய மாணவி
student appears neet exam while parent missing in nepal flood நேபாள வெள்ளத்தில் தனது பெற்றோர் மாயமான நிலையிலும், மஹாராஷ்டிராவை சேர்ந்த மாணவி அழுதேகொண்டே நீட் தேர்வை எழுதியுள்ளார்.
நேபாள வெள்ளத்தில் மாயமான பெற்றோர்
சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், இந்தியர்கள் உட்பட 3,900 பேர் மாயமாகியுள்ளனர்.

மாயமாகியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 67 பேர் கொண்ட குழு கைலாச யாத்திரை மேற்கொண்டிருந்த நிலையில் அவர்களும் வெள்ளத்தில் மாயமாகியுள்ளனர்.
இதில் வெங்கட்ராம் அன்னம்தேவரா அனகா அன்னம்தேவரா தம்பதியும் மாயமாகியுள்ளனர்.

இவர்களின் மகளான தன்வி பெற்றோர் மாயமான சோகத்திலும், ஆகஸ்ட் 30 ஆம் திகதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை எழுதியுள்ளார்.
கண்ணீருடன் நீட் தேர்வு எழுதிய மாணவி
தேர்வுக்கு பின்னர் அழுதுகொண்டே இந்த தேர்வை எழுதியாக தன்வி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "என் பெற்றோர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாத கவலையிலே தேர்வு எழுத சென்றேன். ஆனால் இந்த தேர்வை நான் எழுத வேண்டும் என எனது தந்தை விரும்பினார். என் பெற்றோருக்காக இதை செய்தேன்.
தேர்வுக்குச் சற்று முன்பு எனது அனுமதி அட்டையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்த போது என் தந்தையின் நினைவுகள் என்னை ஆட்கொண்டது. அந்த புகைப்படத்தை என் தந்தைதான் எடுத்தார்.
3 மணி நேர தேர்வில் ஒன்றரை மணி நேரம் அழுது கொண்டே இருந்தேன். என் கண்களில் கண்ணீர் பெருகியதால் சில சமயங்களில் கேள்விகளைப் படிப்பது கடினமாக இருந்தது.
இதில் தேர்வை விட மிகவும் கடினமான விடயம், தேர்வுக்கு முன்பு என் அம்மா எப்போதும் எனக்குத் தயிரும் சீனியும் கொடுப்பார், என் தந்தை என்னை வாழ்த்துவார் இந்த முறை எனக்கு அது கிடைக்கவில்லை.
அவர்கள் கட்டாயம் திரும்பி வர வேண்டும். அவர்கள் திரும்பி வந்தே ஆக வேண்டும். அவர்கள் திரும்பி வராமல் இருக்க முடியாது. என் அம்மா எனக்கு தயிர் சீனி ஊட்டிவிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
கயிலாய யாத்திரைக்கு சென்று தனது பெற்றோர் கடைசியாகக் காணப்பட்ட இடம் குடிவரவு மையம் மற்றும் நட்புப் பாலம் ஆகியவற்றுக்கு அருகிலுள்ள பகுதி என தான்வி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |