நேபாளத்தில் பனிச்சரிவுக்கு காரணம் என்ன? வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் விளக்கம்
delta weatherman hemachandran explains reason behind nepal glacier slide: நேபாளத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு என்ன காரணம் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
நேபாளத்தில் பனிச்சரிவுக்கு காரணம் என்ன?
சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.

சுமார் 4,462 பேர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நீர்மின் நிலைய சுரங்கங்களில் சுமார் 900 பணியாளர்கள் சிக்கியுள்ளதாவும், அவர்களை மீட்க முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
முதலில் நிலநடுக்கம் காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பனிச்சரிவு காரணமாகவே, பனிப்பாறைகள் உருகி, ஆற்றில் நீர்வரத்து பாரிய அளவில் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கில் நீர் மட்டுமில்லாமல், சேறுகள், வீடு, பாறைகள் அடித்து வரப்பட்டுள்ளதால் மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த பனிப்பாறை சரிவு நிகழ்ந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வெள்ளப்பெருக்கு குறித்து விரிவாக பேசிய டெல்டா வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன், நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்கு காரணம் என்ன? இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு எதனால் நடந்தது? இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா?எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய பேராபத்துகள் என்னென்ன என்பது குறித்தும் பேசியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |