தந்தை இறந்ததால் தாயின் பென்ஷன் பணம் ரூ.500-யை வைத்து.., முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி
தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் தந்தையை இழந்தும் கடினமாக படித்து மாணவி ஒருவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
யார் அவர்?
MBBS படிப்பைத் தொடர நடத்தப்படும் நீட் (NEET) மருத்துவத் தேர்வு, உலகின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் வேளையில் பல சிரமங்களைத் தாண்டி வெற்றி பெற்ற பிரேர்ணாவின் (Prerna) கதையை தான் பார்க்க போகிறோம். 2023 ஆம் ஆண்டில் பிரேர்ணா AIR 1033 ரேங்க் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
இந்திய மாநிலமான ராஜஸ்தான், கோட்டாவில் உடன் பிறந்தவர்கள் நான்கு பேருடன் பிரேர்னா வசித்து வருகிறார். இவர் நீட் தேர்வுக்குத் தயாராகும் போது தனது தந்தை இறந்ததால் மிகவும் வருத்தமடைந்தார். மேலும் அவரது குடும்பம் கடனில் மூழ்கியது.
உடன் பிறந்தவர்களை கவனித்துக்கொள்வதும், ரூ.27 லட்சம் கடனை நிர்வகிப்பதும் பிரேர்னாவின் பொறுப்பாக மாறியது. பின்னர், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
அந்த நேரத்தில் கோவிட்-19 தொற்றுநோய் வந்ததால் இன்னும் கடினமாக இருந்தது. பிரேர்ணாவின் ஒரே வருமான ஆதாரம் அவரது தாயார் பெயரில் இருந்த மாத ஓய்வூதியம் ரூ.500 மட்டுமே. சில நேரங்களில் உறவினர்களும் சில உதவிகளை வழங்குவார்கள்.
இவ்வளவு கஷ்டங்கள் இருந்தபோதிலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் பிரேர்ணா உறுதியாக இருந்தார்.
படுப்பதற்கு கூட இடமில்லாத ஒரு சிறிய அறையில் தினமும் 10-12 மணி நேரம் பிரேர்ணா படித்தார். தூக்கம் மற்றும் உணவைப் பற்றி கவலைப்படாமல் படிக்க ஆரம்பித்தார்.
இதனால் அவர் தனது முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 2022 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 720க்கு 686 மதிப்பெண்கள் பெற்று 2.5 லட்சம் மாணவர்களில் அகில இந்திய அளவில் 1033வது இடத்தைப் பிடித்தார்.
2023 ஆம் ஆண்டு நீட் தேர்வு வெற்றிக்கு பிறகு அவர் பேசுகையில், "என் தந்தை எனக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தார். நிதி நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும், என் கனவுகளை நனவாக்குவதை எதுவும் தடுக்க முடியாது என்பதை அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |