குறைந்த மதிப்பெண் கிடைக்கும் என்ற பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி
தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட 10-ம் வகுப்பு மாணவி தேர்ச்சி அடைந்துள்ளார்.
மாணவி தேர்ச்சி
தமிழக மாவட்டமான நாமக்கல், பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லாக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தம்பதியினர் பிரகாசம் மற்றும் கவிதா. இவர்களின் ஒரே மகள் கீர்த்திவாசனி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த மாணவி 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில் தனக்கு குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே கிடைக்கும் என்ற பயத்தில் வீட்டில் யாரும் இல்லாதா நேரத்தில் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்த இவரது தாய் மகளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில் உயிரிழந்த கீர்த்தி வாசனி 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |