400 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவர்: தேசிய பூங்காவில் பரபரப்பு
கிராண்ட் கேனியன் தேசிய பூங்காவின் 400 அடி உயரத்தில் இருந்து கல்லூரி மாணவர் விழுந்து உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிராண்ட் கேனியனின்(Grand Canyon) தெற்கு விளிம்பில் உள்ள பைப் க்ரீக் விஸ்டா(Pipe Creek Vista) அருகே புதன்கிழமை(ஜூலை 31ம் திகதி), கல்லூரி மாணவர் ஒருவர் சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலியானவர் வட கரோலினாவைச் சேர்ந்த 20 வயதான ஏபல் ஜோசப் மெஜியா(Abel Joseph Mejia) எனவும், அவர் இண்டியானா பைபிள் கல்லூரியை சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது..
காலை 10.30 மணிக்கு விழுந்ததாக வந்த தகவலின் பேரில் பூங்கா ரேஞ்சர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதையடுத்து இளைஞர் ஏபல் ஜோசப் மெஜியாவின் உடல் விஸ்டா பகுதியில் இருந்து கால் மைல் தூரத்திற்கு அப்பால் கண்டெடுக்கப்பட்டது.
ஏபல் ஜோசப் மெஜியா விளிம்பு பகுதியில் இருந்த போது தவறி விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தேசிய பூங்கா சேவை மற்றும் Coconino கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |