ஜேர்மன் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதால் இந்திய மாணவர் எடுத்த துயர முடிவு
ஜேர்மனி செல்லும் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதால், இந்திய மாணவர் ஒருவர் 45ஆவது மாடியிலிருந்து குதித்து தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.
ஜேர்மன் விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு
ஜேர்மனியில் கல்வி கற்றுவரும் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த 22 வயது மாணவர் ஒருவர், விடுமுறைக்கு தன் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் ஜேர்மனி செல்வதற்காக விமானம் ஏறச் சென்றுள்ளார்.
அப்போது அவரிடம் அவரது ஜேர்மன் குடியிருப்பு அனுமதியைக் காட்டுமாறு விமான ஊழியர்கள் கோர, தனது மொபைலில் இருக்கும் நகலைக் காட்டியுள்ளார் அவர்.
ஆனால், அசல் ஆவணம்தான் வேண்டும் எனக் கூறி அவரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்துள்ளனர் விமான ஊழியர்கள்.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அந்த மாணவர், ஆட்டோ பிடித்து அவருடைய குடும்பத்துக்கு சொந்தமான அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றிற்குச் சென்றுள்ளார்.
தான் பணம் எடுத்துவிட்டு வருவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநரை காத்திருக்கச் சொல்லிவிட்டு அந்தக் குடியிருப்புக்குள் சென்றிருக்கிறார் அவர்.
ஆனால், அவர் திரும்ப வரவேயில்லை. பிறகுதான் தெரிந்திருக்கிறது, அவர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 45ஆவது மாடிக்குச் சென்று, மாடியிலிருந்து குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்னும் உண்மை.
மகன் ஜேர்மனிக்குச் செல்வதாக பெற்றோர் எண்ணிக்கொண்டிருக்க, அவர்களிடம் கூட எதுவும் கூறாமல் அந்த மாணவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அவரது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |