ஆசியர் என்பதால் தாக்கினேன்…அமெரிக்க பெண்ணின் அத்துமீறிய தாக்குதலில் நிலைகுலைந்த இளம் பெண்
அமெரிக்காவில் 18 வயதான ஆசிய மாணவர் ஒருவர் மீது நடத்தப்பட்ட அமெரிக்க இனவெறி தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனவெறி தாக்குதல்
அமெரிக்காவில் இந்தியானா பல்கலைக்கழக மாணவி(18) ஒரு ஆசியர் என்பதால் அவர் மீது பில்லி டேவிஸ்(56) என்ற பெண் தலையில் பலமுறை குத்தி தாக்குதல் நடத்தி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் ப்ளூமிங்டன்(Bloomington) ட்ரான்சிட் பேருந்தில் வெளியேறும் கதவுகள் திறப்பதற்காக நின்று கொண்டு காத்திருந்தார், அப்போது மற்றொரு பயணியான பில்லி டேவிஸ்(56) அவரது தலையில் அடிக்கத் தொடங்கினார் என்று காவல்துறை அறிக்கைகள் தெரிவித்துள்ளது.
LightRocket via Getty Images
பில்லி டேவிஸ் தனது அமெரிக்க இனத்திற்காக மாணவியை குறிவைத்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். WRTV ஆல் பெறப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, நம் நாட்டை அழிக்கும் நபர்களில் ஒருவர் குறைக்கப்படும் என்ற நோக்கில் மாணவி மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸாரிடம் அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு முன் இரு பெண்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. மேலும் பாதிக்கப்பட்டவரின் தலையில் ஏழு குத்தப்பட்ட காயங்கள் இருந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளார்.
Sky News
பொலிஸார் வழக்கு பதிவு
வியாழன் அன்று, இனவெறித் தாக்குதலில் மடிப்புக் கத்தியைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட குற்றவாளியை மீண்டும் நேர்காணல் செய்த பொலீஸார், அவர் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டினார்கள்.
அத்துடன் இந்த தாக்குதல் முற்றிலும் தூண்டுதல் இன்றி நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில் அவர் மீது வெறுப்புக் குற்றம் சுமத்தப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
IStock Photo.com
தாக்குதல் நடத்தி விட்டு சென்ற டேவிஸை பின்தொடர்ந்து சென்ற சாட்சியம் ஒருவர், அவளது இருப்பிடத்தை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியானா பல்கலைக்கழக பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான துணைத் தலைவர் ஜேம்ஸ் விம்புஷ் வெளியிட்ட அறிக்கையில், Bloomington-ல் ஆசிய எதிர்ப்பு வெறுப்பு உண்மையானது மற்றும் இவை தனிநபர்கள் மற்றும் எங்கள் சமூகத்தின் மீது வலிமிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை வருத்தத்துடன் நினைவுபடுத்தினார்.