பிரான்சில் ஆசிரியரின் முகத்தில் கத்தியால் தாக்கிய மாணவனால் பரபரப்பு: வெளியான புதிய தகவல்
தனது ஆங்கில ஆசிரியரின் முகத்தில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய மாணவர் ஒருவர் மேற்கு பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகிழ்ச்சியாக இல்லை
மேற்கு பிரான்சில் Chemille-en-Anjou பகுதியை சேர்ந்த அந்த ஆசிரியர் காயங்களுடன் தப்பியுள்ளார் என்றே கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், 18 வயதான அந்த மாணவர், தாம் மகிழ்ச்சியாக இல்லை என கூறி வந்ததாக தெரிய வந்துள்ளது.
மேலும், வகுப்பு நடந்துகொண்டிருந்த வேளையிலேயே தாக்குதலை முன்னெடுத்துள்ளார். மட்டுமின்றி, தாக்குதலை அடுத்து உடனடியாக பயன்படுத்திய கத்தியை ஜன்னல் ஊடாக வெளியே வீசியுள்ளார்.
இந்த நிலையில், அந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியருடன் எந்த முன்விரோதமும் அந்த மாணவருக்கு இல்லை என்றும், லேசான காயங்களுடன் ஆசிரியர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொலை முயற்சி வழக்கு
மேலும், கடந்த 3 ஆண்டுகளாக அந்த மாணவர் தொடர்புடைய பாடசாலையில் கல்வி பயின்று வந்துள்ளார். விடுப்புக்கு பின்னர் திங்களன்று பாடசாலையில் திரும்பிய நிலையிலேயே அந்த மாணவர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த வாரம் புதிதாக கத்தி ஒன்றை வாங்கிய அந்த மாணவர், தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாகவே கூறுகின்றனர். தற்போது அந்த மாணவர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |