படிப்புக்காக வாரத்திற்கு 3,380 கிமீ தூரம் விமானத்தில் பயணம் செய்யும் மாணவி
சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் படிப்புக்காக வாரத்திற்கு 3,380 கிமீ விமானத்தில் பயணம் செய்து வருகிறார்.
விமானத்தில் பயணம்
மெக்சிகோ நாட்டில் வசித்து வரும் 30 வயதான நாட் செடிலோ என்ற சட்டக்கல்லூரி மாணவி படிப்புக்காக வாரத்திற்கு 3,380 கிமீ விமானத்தில் பயணம் செய்து வருகிறார்.
இவர் படிப்புக்காக ஒவ்வொரு வாரமும் மான்ஹாட்டனுக்கு விமானத்தில் செல்கிறார். அதாவது இவர் திங்கள் கிழமை அதிகாலை மெக்சிகோவில் இருந்து விமானத்தில் ஏறி அமெரிக்காவுக்கு செல்கிறார்.
அங்கு வகுப்புகளை முடித்த பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்புகிறார். இவர் சட்டக் கல்லூரியில் இறுதி செமஸ்டரை முடிப்பதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஆண்டில் செடிலோவும் அவரது கணவர் சாண்டியாகோவும் அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு மாறினர். அங்குள்ள சிறந்தவ வானிலை மற்றும் மலிவு வாழ்க்கைச் செலவு காரணமாக சென்றனர்.
இதனால் தனது படிப்பு நின்றுவிடக்கூடாது என்பதற்காக செடிலோ இந்த பயணத்தை மேற்கொள்கிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் 13 வாரங்களில் விமானங்கள், உணவு மற்றும் குறுகிய கால தங்கத்திற்காக 2,000 டாலர் (ரூ.1.7 லட்சம்) செலவிட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் 3,380 கிமீ பயணித்து வீடுதிரும்புகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |