தண்ணீர் கேட்டு கெஞ்சி உயிரிழந்த மாணவர்: குடும்பத்திற்கு ரூ.465 கோடி இழப்பீடு
அமெரிக்காவில் மல்யுத்த பயிற்சியின்போது தண்ணீர் தாகத்தால் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக பெரும் தொகையை பல்கலைக்கழகம் கொடுக்கவுள்ளது.
தண்ணீர் கேட்டு கெஞ்சி உயிரிழந்த மாணவர்
அமெரிக்காவில் மல்யுத்த பயிற்சியின் போது குடிக்க தண்ணீர் கேட்டு கெஞ்சி உயிரிழந்த 20 வயது மாணவரின் குடும்பத்திற்கு கென்டக்கி பல்கலைக்கழகத்திலிருந்து 14 மில்லியன் டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் சுமார் 465 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்கப்படும்.
அமெரிக்காவின் டென்னசி மாநிலம் லூயிஸ்வில்லி பகுதியை சேர்ந்த கிராண்ட் பிரேஸ் (Grant Brace) என்ற 20 வயது கல்லூரி மாணவர், மல்யுத்த பயிற்சியின் போது எவ்வள்வு கெஞ்சியும் குடிக்க தண்ணீர் கொடுக்கப்படாததால் உயிரிழந்தார்.
Brace Family
மல்யுத்த பயிற்சியின்போது
இந்த சோக சம்பவம் 2020 ஆகஸ்ட் 31-ஆம் திகதி நடந்தது. கிராண்ட் பிரேஸ் தனது மல்யுத்த பயிற்சியின்போது, ஒரு அங்கமாக " பனிஷ்மென்ட் ஹில்" என்று அழைக்கப்படும் செங்குத்தான ஏற்றத்தில் நாள் முழுவதும் பலமுறை வேகமாக ஏறி இறங்கியதால் உடலில் நீர்வற்றியது. அப்போது அவருக்கு கடுமையாக தாகம் எடுத்துள்ளது.
பிரேஸ் ADHD மற்றும் நார்கோலெப்சி (narcolepsy) நோயால் பாதிக்கப்பட்டவர், குறிப்பாக உடற்பயிற்சியின் போது சரியான நீரேற்றம் தேவைப்படும் மருந்துகளை உட்கொள்ளவேண்டிய நிலையில் அவர் இருந்தார்.
வெப்ப பக்கவாதத்தால் இறந்தார்
ஆனால், அவரது பயிற்சியாளர்கள் அவரை தண்ணீர் குடிக்க அனுமதிக்கவில்லை. " நீ மட்டும் என்ன ஸ்பெஷலா, உனக்கு மட்டும் தண்ணீர் குடுப்பதற்ககு?" என்று கேட்டு கிண்டலும் செய்துள்ளனர். அவர் தண்ணீருக்காக கெஞ்சியும் மறுக்கப்பட்டதால் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 45 நிமிடங்களுக்குப் பிறகு பிரேஸ் இறந்து கிடந்தார்.
AP
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், இப்போது உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டது.
"பிரேஸ் குடும்பத்தின் மிகப்பெரிய இழப்பை மதிக்கும் வகையில் இந்த வழக்கை இப்போது தீர்ப்பதற்கு பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது" என்று பல்கலைக்கழக அறிக்கை கூறியது.