அலறியபடி அடுத்தடுத்து ஆற்றில் விழுந்து உயிரிழந்த மாணவர்கள்! ஆங்காங்கே மரண ஓலம்... பதறவைக்கும் வீடியோ

death students drowned
By Raju Oct 17, 2021 05:50 AM GMT
Report

இந்தோனேசியாவில் ஆற்றில் முழுகி 11 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் ஆண்டு தோறும் கனமழையின் காரணமாக பயங்கர நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.

மேலும் வெள்ளத்தில் அடித்து வரப்படும் குப்பை கூழங்கள் ஆறுகளில் தேங்கி சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இதனால் இந்தோனேசியாவில் உள்ள ஏராளமான தன்னார்வ அமைப்புகள் வெள்ளம் வடிந்த பிறகு, ஆறுகளில் தேங்கிய குப்பைகூழங்களை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளை செய்து வருகின்றன.

இந்த நிலையில் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சியாமிஸ் நகரில் உள்ள உயர்நிலை பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் அங்குள்ள சிலியூர் ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆசிரியர்களின் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.


அப்போது மாணவர்களில் சிலர் ஆற்றில் இருந்த பாறைகள் வழியாக ஆற்றை கடக்க முயன்றனர். 21 மாணவர்கள் ஒருவரின் கையை ஒருவர் பிடித்தப்படி ரெயில் பெட்டி போல பாறையில் நடந்து சென்றனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த மாணவர் ஒருவர் திடீரென கால் இடறி ஆற்றுக்குள் விழுந்தார். அவரை தொடர்ந்து மற்ற 20 மாணவர்களும் அடுத்தடுத்து ஆற்றுக்குள் அலறியபடி விழுந்தனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. கரையில் நின்று கொண்டிருந்த சக மாணவர்கள் அனைவரும் தங்கள் நண்பர்கள் ஆற்றில் மூழ்குவதை கண்டு அதிர்ச்சியில் கத்தினார்கள். மாணவர்களின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ஆற்றுக்குள் இறங்கி மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் ரப்பர் படகுகளை பயன்படுத்தி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் இந்த தேடுதல் வேட்டை நீடித்தது.

இருந்தபோதிலும் 11 மாணவர்களை பிணமாகத் தான் மீட்க முடிந்தது. அதே சமயம் 10 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்ட அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

அலறியபடி அடுத்தடுத்து ஆற்றில் விழுந்து உயிரிழந்த மாணவர்கள்! ஆங்காங்கே மரண ஓலம்... பதறவைக்கும் வீடியோ | Students Drowned In River Death 11 Shocking

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US