கனடாவில் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் சர்வதேச மாணவர்கள்: பிராம்ப்டன் மேயர் பரபரப்பு தகவல்
கனடாவின் பிராம்ப்டன் நகரில் சர்வதேச மாணவர்கள் உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கும் மனிதக் கடத்தலுக்கும் உட்படுத்தப்படுவதாக மேயர் பாட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தக் குற்றச்செயல்கள் “அன்றாட வாழ்க்கையில் அனைவருக்கும் தெரியப்படுமாறு நடக்கின்றன” என்று அவர் கூறினார்.
மேலும், இதனை சமூதாயத்தின் "புற்றுநோய்" எனக் குறிப்பிடும் அவர், பிராம்ப்டன் நகரம் இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அறிவித்தார்.
சமூக சேவை அமைப்புகள் மற்றும் மாணவர் உரிமைகள் குழுக்கள் பல வருடங்களாக எச்சரித்து வந்த நிலையில், எந்தவொரு அரசு அதிகாரிகளும் இதனை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்வது இது தான் முதன்முறை.
குறிப்பாக இளம் பெண்கள், வாடகை வீடுகளில் வசிப்பவர்கள், வேலைகளில் முதலாளிகள் மற்றும் காதல் உறவுகளால் சுரண்டப்படுவதாக சமூக சேவையாளர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
வேலை வாய்ப்பு அல்லது குறைந்த வாடகை சலுகைகள் மூலம் மாணவர்கள் முறைகேடாக ஈர்க்கப்படுகிறார்கள், பின்னர் வன்முறை அல்லது நாடு கடத்தல் மிரட்டல்களின் மூலம் அவர்களை பாலியல் தொழிலுக்கு தள்ளுகின்றனர்.
பிராம்ப்டன் நகர கவுன்சில் மனிதக் கடத்தலை தடுக்க ஒரு தீர்மானத்தை புதன்கிழமை நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை முன்வைத்த கவுன்சிலர் ரோவினா சான்டோஸ், கூட்டாட்சி மற்றும் மாகாண அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
கூட்டாட்சி அரசு மாணவர் அனுமதி வழங்குவதை கட்டுப்படுத்தும் நிலையில், மாகாணங்கள் பல்கலைக் கழகங்களில் சர்வதேச மாணவர்களிடம் இருந்து பெறப்படும் கட்டணத்திற்கு மிகவும் சார்ந்துள்ளன.
போராட்டக் குழுக்கள், மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பால் அவர்கள் சுரண்டப்படுவதற்கான அபாயங்கள் வளர்ந்துவிட்டதாக குற்றம் சாட்டுகின்றன.
2023-ஆம் ஆண்டின் முடிவில், கனடாவில் 10 இலட்சம் மாணவர்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. இதில் பாதிக்கும் மேல் ஒன்ராறியோவில் வசிக்கின்றனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
சர்வதேச மாணவர்கள் அதிக விலைவாசியால் பாதிக்கப்பட்டு தவறான முடிவுகள் எடுக்க நேரிடுவதாக கூறப்படுகிறது. மேலும், வேலை மற்றும் வாடகை சலுகைகளின் பெயரில் சிலர் மாணவர்களைத் துஷ்பிரயோகம் செய்வதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்கிறது என்பதற்காக Elspeth Heyworth Women’s Centre அமைப்பு செயல்பட்டு வருகின்றது. மேலும், காதல் உறவுகள் மூலம் பெண் மாணவர்களின் வங்கிக் கணக்குகளை கட்டுப்படுத்தி ஏமாற்றுவதற்கான சம்பவங்களும் அறிக்கையிடப்பட்டுள்ளது.
சில ஆண் மாணவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட மூழ்கடிக்கப்படுகிறார்கள் என்றும் சமூக ஊடகங்கள் மூலமாக மாணவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |