கனடாவில் இடிந்து விழுந்த நடைபாதையால் பரபரப்பு: 17 மாணவர்கள் படுகாயம்
கனடாவில் சுற்றுலா தளம் ஒன்றில் உள்ள நடைபாதை இடிந்து விழுந்ததில் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சுற்றுலா சென்ற மாணவர்கள்
கனடாவின் வின்னிபெக் மாகாணத்தில் உள்ள செயிண்ட் போனிபேஸ் என்ற பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்று தங்கள் மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மாணவர்களை எங்கே அழைத்துச் செல்வது என்று ஆலோசனை எழுந்த போது, மாணவர்களை அங்குள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான ஜிப்ரால்டர் கோட்டைக்கு அழைத்து செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Trevor Brine/CBC
இடிந்து விழுந்த பாலம்
பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டின் கீழ் மாணவர்கள் ஜிப்ரால்டர் கோட்டைக்கு சென்ற நிலையில், அங்குள்ள உயர் நடைபாதையில் ஏறி மாணவர்கள் கோட்டையின் அழகை ரசித்து கொண்டு இருந்தனர்.
ஆனால் 5 மீட்டர் வரை உயரம் கொண்ட நடைபாதை துர்திஷ்டவசமாக இடிந்து விழுந்தது.
Trevor Brine/CBC
மாணவர்கள் படுகாயம்
இதையடுத்து மீட்பு மற்றும் அவசர அழைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைவாக மீட்பு பணிகள் முடக்கி விடப்பட்டன.
இருப்பினும் இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் வரை படுகாயமடைந்துள்ளனர். மேலும் மாணவர்களுடன் வந்த ஆசிரியர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்பு மருத்துவமனைக்கு அவசர சேவைகள் அனுப்பி வைத்துள்ளனர்.