பவன் கல்யாணின் வாகனத்தால் JEE தேர்வை எழுத முடியாமல் போன 30 மாணவர்கள் குமுறல்
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்களால் JEE தேர்வை தவறவிட்டதாக 30 மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் கவலை
பெண்டுர்தி ஏஐ டிஜிட்டல் ஜேஇ அட்வான்ஸ் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 30 மாணவர்கள் நேற்று காலை ஜேஇஇ நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக விசாகபட்டினத்திற்கு புறப்பட்டுள்ளனர்.
அந்த நேரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்கள் சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் செல்லும் வாகனங்களை போக்குவரத்து பொலிஸார் நீண்ட நேரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதன் காரணமாக தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், தேர்வு மைய அதிகாரிகள் தங்களை தேர்வெழுத அனுமதிக்கவில்லை என்று 30 மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், "எங்கள் பிள்ளைகள் நீண்ட நேரமாக டிராபிக்கில் சிக்கியதால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் அவர்களுக்கு வேறொரு நாளில் மீண்டும் தேர்வு நடத்துவதற்கு துணை முதல்வர் பவன் கல்யாண் பரிசீலனை செய்ய வேண்டும்” என்றனர்.
மேலும், இது தொடர்பாக எதிர்க்கட்சியான YSR காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்த மாநிலத்துக்கு ஒரு சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் தேவை. இவர் பொது மக்களை பிரஸ் ரிலீஸ் நிகழ்வைப் போல தொடர்ந்து நடத்துகிறார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |