மக்ரோனும் வேண்டாம்.. லு பென்னும் வேண்டாம்! ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜனாதிபதி வேட்பாளர்களான மக்ரோன் மற்றும் மரைன் லு பென்னுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஏப்ரல் 10ம் திகதி நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் இம்மானுவேல் மக்ரோன் 27.42 சதவிகித வாக்குகளையும், மரைன் லு பென் 24.92 சதவிகித வாக்குகளையும் பெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
தீவிர இடதுசாரி தலைவரான Jean Luc Melenchon 22 சதவிகித வாக்குகளை பெற்று 3வது இடம்பிடித்தார்.
முதல் சுற்றில் எந்த ஒரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால், அதாவது 50 சதவித வாக்குகளுக்கு மேல் யாரும் பெறவில்லை என்பதால், ஏப்ரல் 24ம் திகதி 2வது சுற்று தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில், முதல் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மக்ரோன்-மரைன் லு பென் மோதுகின்றனர்.
இந்நிலையில், பாரிஸில் மக்ரோன்-மரைன் லு பென்னுக்கு எதிராக உயர்நிலை பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
#France
— ZOONewsTV (@ZOONewsTV) April 19, 2022
High school students rise against both
Emmanuel #Macron & his challenger Marine #LePen, with #Paris seeing their protest on Tuesday. pic.twitter.com/ISmH5vPhZk
கிரெமின்னாவை கைப்பற்றியது ரஷ்யா.. பின்வாங்கிய உக்ரைன் ராணுவம்!
பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின் மீது மாணவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த பள்ளிகளை முற்றுகையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போராட்டக்காரர்கள் இடதுசாரி வேட்பாளர் Jean Luc Melenchon ஆதரிப்பதாக கூறப்படுகிறது.