கிரெமின்னாவை கைப்பற்றியது ரஷ்யா.. பின்வாங்கிய உக்ரைன் ராணுவம்!
உக்ரைனின் கிழக்கு பகுதி நகரமான கிரெமின்னாவை ரஷ்யப் படைகள் கைப்பற்றி இருப்பதாக பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் புதிய தாக்குதலில் கைப்பற்றப்பட்ட முதல் நகரம் கிரெமின்னா என கூறப்படுகிறது.
கிரெமின்னா, தலைநகர் கீவில் இருந்து தென்கிழக்கே 100 கிமீ தொலைவில் உள்ள 18,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரமாகும்.
லுஹான்ஸ்க் பிராந்திய கவர்னர் Serhiy Gaidai கூறியதாவது, கிரெமின்னா தற்போது ரஷ்யர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் நகருக்குள் நுழைந்துவிட்டனர்.
ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோன் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை! வெளிப்படையாக கூறிய பிரான்ஸ் பிரதமர்
நமது உக்ரேனிய படைகள் பின்வாங்கிவிட்டன. அவர்கள் புதிய நிலைகளில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர் மற்றும் ரஷ்ய ராணுவத்துடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரஷ்யப் படைகள் எல்லா பக்கங்களிலிருந்தும் தாக்கினார். பொதுமக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது சாத்தியமில்லை.
எங்களிடம் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் உள்ளன, சுமார் 200 பேர் இறந்துள்ளனர், ஆனால் உண்மையில் இன்னும் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று Serhiy Gaidai தெரிவித்துள்ளார்.