ஆபத்தை உணராமல் இணையத்தில் அறிமுகமான நபரைக் காணச் சென்ற மாணவிகள்: செய்த மற்றொரு குற்றம்..
அமெரிக்காவில் இணையத்தில் அறிமுகமான நபரை சந்திக்க சென்ற மாணவி மற்றும் தோழி மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆபத்து என தெரியாமல் சிக்கிக்கொள்ளும் பதின்ம வயதுப் பெண்கள்
இணையம் அல்லது சமூக ஊடகங்கள் பெருகியதிலிருந்து, முன்பின் தெரியாதவர்களிடம், அவர்கள் தங்களை காதலிப்பதாக தவறாகப் புரிந்துகொண்டு, அவர்களை பெற்றோருக்குத் தெரியாமல் சந்திக்கச் செல்லும் பதின்மவயதுப் பெண்கள் குறித்த பல செய்திகள் வெளியாகி வருகின்றன.
அதுவும், கையில் மொபைல் வந்ததிலிருந்து பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதே பெற்றோருக்கு தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
பெற்றோருக்குத் தெரியாமல் புறப்பட்ட மாணவி
Jade Gregory என்னும் 12 வயது மாணவி, தன் தோழியான Khloe Larson எனும் 14 வயது மாணவியை அழைத்துகொண்டு ப்ளோரிடாவிலிருந்து அலபாமாவிற்கு புறப்பட்டிருக்கிறாள்.
கார் ஓட்டும் வயது வராத Jade, தன் தந்தையின் காரை அவருக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு, தன் தோழியுடன், 400 மைல் தூர பயணம் புறப்பட்டிருக்கிறாள்.
அவர்கள் மாயமான தகவல் பொலிசாருக்கு அறிவிக்கப்பட, தெற்கு அமெரிக்காவே பதற்றமாகியுள்ளது. பொலிசார் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட, ஆறு மணி நேரத்திற்குப் பின் Louisiana என்ற இடத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மாணவிகளை பொலிசார் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பெரும் ஆபத்திலிருந்து தப்பிய மாணவிகள்
அந்த மாணவிகள் இருவரும் தாங்கள் இணையத்தில் அறிமுகமான ஒரு ஆணை சந்திப்பதற்காக புறப்பட்டிருக்கிறார்கள். இளம்பெண்களை பாலியல் தொழிலுக்காக கடத்தும் ஒரு கூட்டத்தின் வலையில் அவர்கள் சிக்கியிருக்கக்கூடும் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அந்த மாணவிகள் இருவரும் எங்கு எப்படி பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.